ஹூஸ்டன், ஏப். 10- அமெரிக்காவில் ‘பேய் குழந்தை’ எனக் கூறி தங்கள் சொந்த 6 வயது மகனை பெற்றோரே கொன்று விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடியிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகித்துள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் தின் புறநகரான எவர்மேனில் வசிப்பவர் சிண்டி (வயது 37). இந்திய வம்சாவளி. இவருக்கு நோயல் ரோட்ரிக்ஸ் அல்வா ரெஸ் (வயது 6) உட்பட 10 குழந்தைகள் உள்ளனர். சிண்டி தனது 2ஆவது கணவர் அர்ஷ்தீப் சிங்குடன் நோயல் உள்பட 6 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். மற்ற 3 குழந்தைகள் அவர்களது தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு சிண்டிக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைகளை நோயல் பெரிதும் காயப்படுத்துவதாக சிண்டி அக்கம்பக்கத்தினரிடம் புகார் கூறி உள்ளார். அவனுக்கு பேய் பிடித்துள்ளது, இது சாத்தானின் குழந்தை என நோயலை சிண்டி துன்புறுத்தியதாக தெரிகிறது.
நோயல் பிறக்கும் போதே பல்வேறு உடல் உபாதைகளுட னும் வளர்ச்சி குறைபாட்டுடனும் பிறந்த சிறுவன். இவனை கவனித்துக் கொள்ள விரும்பாத சிண்டி, தனது கணவன் மற்றும் 5 குழந்தைகளுக்கு சமீபத்தில் கடவுச்சீட்டு எடுத்து இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். அவர்களுடன் நோயல் செல்லாத நிலையில் கடந்த மாதம் அவனை காணவில்லை என்ற புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்தனர். இதில் சிண்டி பல பொய்களை கூறியது தெரியவந்தது. இதனால் அவர்கள் நோயலை கொன்று புதைத்து விட்டு இந்தியாவுக்கு தப்பியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். எனவே, சிண்டி மற்றும் அர்ஷ்தீப் சிங்கை அமெரிக்காவுக்கு நாடு கடத்தி விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment