மதுரை, ஏப். 28 மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபாதேவி, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், நான் எனது பெற்றோர் வீட்டில் 6 வயது மகள், 4 வயது மகனுடன் வசித்து வருகிறேன். இந்தநிலையில் எனது மகளை திடீரென காணவில்லை. அவளை கண்டுபிடித்து ஆஜர்படுத்தும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கண்ணதாசன் என்பவர் நீதிபதிகள் முன்பு ஆஜராகி, நான் மனுதாரரின் கணவர். என் மகளை அவர்களின் வீட்டில் இருந்து நான்தான் அழைத்து சென்றேன். கடத்திச் செல்லவில்லை. மனைவி, குழந்தை களுடன் சேர்ந்து வாழ ஆசைப்படு கிறேன். ஆனால் என் மனைவி தரப்பில் ஒத்துழைக்கவில்லை. இதனால் கடும் மனஉளைச்சலில் உள்ளேன். ஏற்கனவே என் மகனை அழைத்து சென்றது தொடர்பான வழக்கில் வாரத்தில் சில நாட்கள் என் மனைவி வீட்டிற்கு சென்று நான் குழந்தைகளை சந்திக்க லாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் குழந்தைகளை நான் சந்திக்க என் மனைவி வீட்டினர் அனுமதிப் பதில்லை என்று கூறி, அழுதார். அதற்கு மனுதாரர் வழக்குரைஞர் ஆஜராகி, ஏற்கெனவே குழந்தைகள் மனுதாரர் வசம் இருக்கட்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்றார்.ஆனால் நீதிபதிகள், இவர்களின் மகன் விவகாரத்தில்தான் நீதிமன்றம் உத்தர விட்டது. மகளை பராமரிப்பது பற்றி நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்றனர்.
மேலும் நீதிபதிகள், எத்தனையோ கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றில் எல்லாம் உடனடியாக கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்படுவ தில்லை. மகளை அவரது தந்தை அழைத்து சென்றதற்காக அவசரம் அவசரமாக கடத்தல் வழக்குப்பதிவு செய்தது ஏற்புடையதல்ல என அதிருப்தி தெரிவித்தனர். பின்னர் நீதி பதிகள் பிறப்பித்த உத்தரவில், "தாத்தா, பாட்டி, பெற்றோர், குழந்தைகள் என குடும்பமாக வசிப்பதுதான் இந்திய கலாச்சாரம். ஆனால் ஒருவரின் சொத் துகள், ஜீவனாம்சம் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்டவர்கள் பெற்றுக்கொள் கின்றனர். குழந்தைகளையும் பிரித்து விட்டு, அந்த நபரை தனிமையில் விட்டு விடுவது எந்த வகையில் நியாயம்? மனுதாரருடன் அவரது கணவர் சேர்ந்து வாழ்வதற்காக தன் மகளை அழைத்து சென்றதாக கூறுகிறார்.
இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்படும் வரை ஒரு குழந்தையை மனு தாரரான தாயும், மற்றொரு குழந்தையை தந்தையும் பராமரிப்பதில் எந்த தவறும் இல்லையே. இதை கடத்தல் சம்பவமாக கருத முடியாது. எனவே தற்சமயம் மனுதாரரின் மகள் அவரது தந்தையின் பராமரிப்பில் இருக்கலாம். தேவைப் பட்டால் கீழ் நீதிமன்றத்தில் முறையீடு செய்து, உரிய பரிகாரம் தேடிக்கொள்ள லாம் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.
No comments:
Post a Comment