டில்லி மேயர் தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 27, 2023

டில்லி மேயர் தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி வெற்றி

புதுடில்லி, ஏப். 27- கடைசி நேரத்தில் பா.ஜனதா வேட்பாளர்களைத் திரும்பப் பெற்ற நிலை யில் டில்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. 

தலைநகர் டில்லியில், வடக்கு டில்லி, தெற்கு டில்லி, கிழக்கு டில்லி என 3 ஆக பிரிந்து இருந்த டில்லி மாநகராட்சி, கடந்த ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டது. இந்த இணைப்பின் மூலம் 272 வார்டுகள் 250 ஆக குறைந்தன. இத னைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி, ஒருங்கி ணைந்த டில்லி மாநக ராட்சிக்கு தேர்தல் நடத் தப்பட்டது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, 134 இடங் களை வென்று அசத்தி யது. பா.ஜனதாவுக்கு 104 வார்டுகள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 9 இடங் களை கைப்பற்றியது. 3 இடங்களை சுயேச்சைகள் கைப்பற்றினர். பெரும் பான்மையாக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட் சிக்கு மேயர் பதவி எளி தாக கிடைக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் நியமன உறுப்பினர்க ளுக்கு வாக்குரிமை வழங் கப்பட்டது தொடர் பாக ஏற்பட்ட குழப்பத்தில் மேயர் தேர்தல் 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. 

4ஆ-வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பெண் கவுன்சிலர் ஷெல்லி ஒப ராய், பா.ஜனதா வேட்பா ளரை 34 வாக்குகள் வித் தியாசத்தில் வென்று மேயர் ஆனார். துணை மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஆலே முகமது இக்பால் தேர்வு பெற்றார். டில்லி மாநகராட்சியை பொறுத்தவரை மேயர் பதவி ஆண்டுதோறும் பெண், பொது, ஒதுக் கீட்டு பிரிவினர் என இன சுழற்சி முறையில் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டு முடிவடைந்ததும் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறும். அதன்படி இந்த நிதி யாண்டு தொடங்கியதை தொடர்ந்து மேயர் மற் றும் துணை மேயர் தேர் தல் நேற்று (26.4.2023) நடைபெற்றது.

இதில் ஆம் ஆத்மி சார்பில் மேயர் பதவிக்கு மீண்டும் ஷெல்லி ஓபரா யும், துணை மேயர் பத விக்கு மீண்டும் ஆலே முக மது இக்பாலும் போட்டியிட்டனர். ஷெல்லி ஓப ராயை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளர் ஷிகா ராய் நின்றார். முகமது இக்பாலை எதிர்த்து பா.ஜனதாவின் சோனி பாண்டே களம் இறங்கி னார். ஆனால் கடைசி நேரத்தில் பா.ஜனதா வேட் பாளர்களைத் திரும்பப் பெற்றது. இதனால் ஷெல்லி ஓபராய் மீண்டும் மேயராக போட்டியின்றி தேர்வு பெற்றார். 

அதைப்போல துணை மேயர் பதவியும் போட்டியின்றி கிடைத் தது. வெற்றி பெற்றவர்க ளுக்கு முதலமைச்சர் அர விந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment