ஆளுநர்களின் அத்துமீறல்களை ஒன்றிணைந்து முறியடிப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 19, 2023

ஆளுநர்களின் அத்துமீறல்களை ஒன்றிணைந்து முறியடிப்போம்!

தமிழ்நாடு முதலமைச்சருக்கு கேரள முதலமைச்சர் கடிதம்!

தமிழ்நாடு முதலமைச்சர் நன்றி அறிவிப்பு!

சென்னை,ஏப்.19-  பி.ஜே.பி. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் அத்துமீறி நடந்துகொள்கிறார்கள். நீதி மன்றமே கூட தமிழ்நாடு ஆளுநரின் சில முடிவுகளுக்குக் குட்டு வைத்துள்ளது.

தமிழ்நாடு அரசும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப் பட்டது.

இந்த நிலையில், ஆளுநர் குறித்த தமிழ்நாடு அரசின் முயற்சிக்குக் கேர ள மாநில அரசும் துணை நிற்கும்;  ஆளுநர் களின் அத்துமீறல்களை ஒன்றிணைந்து முறியடிப்போம் என்று கேரள மாநில முத லமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள் ளார்.  தமிழ்நாடு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாடு அரசுக்குத் தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுத்து வருகிறார். குறிப்பாகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்.

மேலும் ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என்பது மரபாக இருக்கும் போது, தனது பொறுப்பை மறந்து பொது வெளியில் சமூகநீதிக்கு எதிராகப் பேசி வருகிறார். இதையடுத்து ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

‘சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்கக் கால நிர்ணயம் வேண்டும்' என்பதே அந்தத் தீர்மானம். இந்தத் தீர் மானம் நிறைவேற்றப்பட்ட இரண்டு மணிநேரத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவிற்குக் கையெழுத்துப் போட்டு விட்டார் ஆளுநர்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப் பேர வையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தைச் சுட்டிக்காட்டி பா.ஜ.க அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

பினராயி விஜயன் கடிதம்

ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன் மொழிவு மிகவும் பாராட்டத்தக்கது என கூறி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு, பினராயி விஜயன் கடிதம் எழுதி யுள்ளார்.

அந்த கடிதத்தில், "மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்யக்கோரி, மாநில சட்டப் பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று தாங்கள் எழுதிய கடிதம் எமக்குக் கிடைத்தது.

ஆளுநர் விவகாரத்தில் கேரள அர சின் நிலைப்பாடும், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடும் ஒன்றுதான். தங்களது முன்மொழிவு மிகவும் பாராட்டத்தக்கது மற்றும் வரவேற்கத் தக்கது.

வாக்காளர்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநில சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப் பட்ட சட்ட நடவடிக்கைகளை மிக நீண்ட காலமாக நிறுத்தி வைப்பது, மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்குச் சமம்.

மாநில அரசுகளின் செயல்பாட்டைத் தடுக்கும் அனைத்து முயற்சிகளையும் நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். 

கூட்டாட்சிக் கொள்கைகளை அச் சுறுத்தும் ஆளுநர்களின் நடவடிக் கைகளுக்கு எதிராகக் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். ஆளுநர் விவகாரத்தில் தாங்கள் எடுக்கும் நட வடிக்கைகளுக்கு முழு மனதுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். தங்களது முன்மொழிவை மிகுந்த தீவிரத் துடன் பரிசீலிப்போம்" என தெரிவித்துள் ளார்.

இந்தக் கடிதத்தை அடுத்து பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "எனது கடிதத்துக்கு உரிய பதிலையும், முழு ஆத ரவையும் வழங்கிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு நன்றி!

தமிழ்நாடும், கேரளமும் எப்போதுமே மாநிலத் தன்னாட்சியைப் பாதிக்கும் எந்த முயற்சிக்கும் எதிரான தடுப்பர ணாகத் திகழ்ந்து வந்துள்ளோம். ஆளு நர்களின்  அதிகார வரம்பு மீறலுக்கு எதிரான நமது போராட்டத்திலும் வெற்றி பெறுவோம். தீ பரவட்டும்" என தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment