பகவதி அம்மன் கோவிலில் பெண் ஓதுவார் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 9, 2023

பகவதி அம்மன் கோவிலில் பெண் ஓதுவார் நியமனம்

தென்தாமரைகுளம்,ஏப்.9- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓதுவாராக பணியாற் றியவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டார். இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓதுவார் இல்லாத நிலை இருந்து வந்தது.

எனவே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கென்று தனி யாக ஓதுவார் நியமிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச் சியில் உள்ள உய்யக் கொண்டான் திருமலை சிவன் கோவிலில் கடந்த 10 ஆண்டுளாக ஓதுவராக பணி யாற்றி வந்த பிரசன்னா தேவி என்பவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு புதிய ஓதுவா ராக நியமிக்கப்பட்டு உள்ளார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு இப்போது தான் முதல்முறையாக பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து பிரசன்னா தேவியிடம் கேட்டபோது, "எனது சொந்த  ஊர் திருச்சி. இசை மற்றும் ஆன்மிகத்தின் ஈர்ப்பால் நான் திருச்சி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2004 முதல் 2007 வரை இசை கல்வி படித்தேன்.

பின்னர் திருச்சியில் உள்ள உய்யக் கொண்டான் திருமலை சிவன் கோவிலில் ஓதுவாராக இருந்து வந்தேன். எனக்கு திருமண மாகி கணவர் திருச்சியில் ஓட்டு நராக வேலை பார்த்து வருகிறார். 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

நான் திருச்சியில் சிவன் கோவிலில் தனியார் நிதி உதவியில் பணியாற்றி வந்தேன். இந்தநிலையில் சுசீந்திரத்தில் நடந்த ஓதுவாருக் கான நேர்காணலில் கலந்து கொண்டேன். இதில் தேர்வு செய்யப்பட்டு அரசு சார்பில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ஓதுவாராக நியமிக்கப் பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு பணியாற்றுவதை பெருமையாக நினைக்கிறேன்" என்றார்.

No comments:

Post a Comment