கோடை விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளின் விசாரணை: உயர்நீதிமன்றம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 30, 2023

கோடை விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளின் விசாரணை: உயர்நீதிமன்றம் அறிவிப்பு

 சென்னை, ஏப்.30- சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மே மாதம் கோடை  விடுமுறை விடப்படுகிறது. இந்த காலத்தில் அவசர வழக்குக ளின் விசா ரணை குறித்தும், அதை விசாரிக்க உள்ள நீதிபதிகள் குறித்தும் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் அறி விக்கை வெளியிட்டுள்ளார். 

அதன்படி, மே 2 மற்றும் 3ஆம் தேதிகளில் (செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில்) தாக்கல் செய் யப்படும் அவசர வழக்குகள், 4 மற்றும் 5ஆம் தேதிகளில் (வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்) விசாரிக் கப்பட உள்ளன. மே மாதத்தின் பிற வாரங்களில் திங்கள் மற்றும் செவ் வாய்க்கிழமைகளில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அந்த வழக்குகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் விசாரிக்கப்படும்.

விடுமுறைகால சிறப்பு அமர் வில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜெ.சத்யநாராயண பிரசாத், ஜி.கே.இளந்திரையன், எஸ்.சவுந்தர், அனிதா சுமந்த், எம்.நிர்மல்குமார், சுந்தர் மோகன், பி.பி.பாலாஜி, கே.ஜி.திலகவதி, சி.வி.கார்த் திகேயன், செந்தில்குமார் ராம மூர்த்தி, ஏ.ஏ.நக்கீரன், கே.குமரேஷ் பாபு, பி.புகழேந்தி, சத்திகுமார் சுகுமார குரூப், முகமது சபீக், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் வழக்கு களை விசாரிப்பார்கள்.

அதேபோல நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.தண்ட பாணி, ஆர்.விஜயகுமார், ஆர்.தாரணி, ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.சிறீமதி, ஆர்.கலைமதி, என்.மாலா, டி.வி.தமிழ்ச் செல்வி, எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா, பி.வட மலை ஆகியோர் வழக்குளை விசாரிப்பார்கள்.

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மே மாதம் 25ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்த கோடைகால விடுமுறை காலத்தில் அவரும் அவசர வழக்குகளை விசாரிக் கிறார். 

உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் மே 17 மற்றும் 18ஆம் தேதி களிலும், சென்னை உயர்நீதி மன் றத்தில் மே 24 மற்றும் 25ஆம் தேதி களிலும் அவர் அவசர வழக்குகளை விசா ரிக்கிறார்.

No comments:

Post a Comment