டில்லியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைவு: ஒன்றிய அரசுமீது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 22, 2023

டில்லியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைவு: ஒன்றிய அரசுமீது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஏப்.22 டில்லி சாகெத் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று (21.4.2023) விசா ரணைக்கு வந்த பெண் மீது ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். பலத்த காய மடைந்த பெண்ணை அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டில்லியில் சட்டம்- ஒழுங்கு  முற்றிலும் சீர்குலைந்துள் ளது என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித் துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் வெளி யிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "டில்லி யில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. பிறர் பணிக்கு இடையூறு ஏற்படுத்தாமல், ஒவ் வொரு விஷயத்திலும் கேவலமான அரசியலில்  ஈடுபடாமல் ஒவ்வொரு வரும் அவரவர் பணியில் கவனம் செலுத்த வேண்டும். அதை சரியாக செய்யமுடியாவிட்டால் பதவி வில குங்கள். மற்றவர்களைச் செய்ய விடுங்கள். மக்களின் பாதுகாப்பை வாய்ப்பாக விட்டுவிட முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.







































No comments:

Post a Comment