மும்பை, ஏப்.10- மராட்டியத்தில் மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்களை தேனீக்கள் கூட்ட மாக வந்து கொட்டியதில் 2 பேர் பலியானார்கள்.
மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டம் நாக்பிட் தாலுகா சத்பாகினி வனப்பகுதியில் மலைக்கோவில் உள்ளது. மலைக்கோவில் செல்லும் பாதையில் பக்தர்களை அடிக்கடி தேனீக்கள் தாக்கி வந்தன. எனவே கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் தேனீக்கள் தொடர்பான எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வனத் துறையினரின் எச்சரிக்கையை மீறி பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சத் பாகினி மலைக்கோவிலுக்கு சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினமும் பக்தர்கள் கோவிலுக்குசென்றுள்ளனர். அப்போது திடீரென தேனீக்கள் கூட்டம் மலைப்பகுதியில் சென்ற பக்தர்களை வீரட்டி விரட்டி கொட்டியது. இதைய டுத்து பக்தர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்து உள்ளனர். தேனீக்கள் கொட்டியதில் 6 மாத குழந்தை உள்பட 4 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் நாக்பூரை சேர்ந்த அசோக் (வயது 62), குலாப்ராவ் (58) ஆகிய 2 பக்தர்கள் மலையில் இருந்து கீழே வராமல் காணவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர், காவல்துறையினர் மலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குலாப்ராவ் தேனீக்கள் கொட்டிய நிலையில் ஆபத்தான நிலையில் மீட் கப்பட்டார். அவரை வனத்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அசோக்கை மலை உச்சியில் பிணமாக மீட்டனர்.
No comments:
Post a Comment