லூதியானா, ஏப்.30 பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று (30.4.2023) காலை 7.15 மணிக்கு திடீர் வாயுக் கசிவு ஏற்பட்டதால் 9 பேர் உயிரிழப்பு; மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
லூதியானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வாயுக் கசிவு ஏற்பட்டதால் 9 தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் சிக்கிக் கொண்டனர். இதுபற்றி அறிந்ததும், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மயக்கமடைந்த 9 பேரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் இறந்து விட்டனர்.
தேசிய மீட்பு குழுவினரும் நிகழ்விடத்திற்கு வர வழைக்கப்பட்டனர். தொழிற்சாலையில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மீட்புப் பணிகள் முழுமையாக முடிந்தால் தான் எத்தனை பேர் தொழிற்சாலைக்குள் இருந் தார்கள் என்பது தெரியவரும். இறப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. வாயுக் கசிந்ததால் தொழிற் சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்த பகுதி முழுவதும் தற்போது காவல்துறையினரின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment