முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
சென்னை, ஏப்.22- வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினையில் விரைவாக நடவடிக்கை எடுக் கப்பட்டு, 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது டன் 178 பேர் கைது செய் யப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபையில் நேற்று காவல் துறை, தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
வதந்தி
மிகப்பெரிய மோதல் ஒன்று அரசின் வேக மான நடவடிக்கைகளால் எப்படி தவிர்க்கப் பட்டது என்பதற்கு எடுத்துக்காட்டுதான், வடமாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்படு கிறார்கள் என்று பரப்பப்பட்ட வதந்திகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். தமிழ்நாட்டில், பீகார், அசாம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் தங்கள் தொழில்களில் ஈடுபடும்வண்ணம் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையேதான், அந்த வதந்தி தமிழ்நாட்டில் பரப்பப்பட்டது.
அவசர ஆலோசனை கூட்டம்
இதுகுறித்து, என்னுடைய தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட் டது. இவ்வாறு வதந்திக் காட்சிப் பதிவுகளை பரப்புவோர்மீது உடனடி நடவடிக்கை மேற் கொள்ளுமாறு காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டேன். வடமாநிலங்களில் இரு பிரி வினரிடையே நடைபெற்ற மோதல் சம் பவத்தை தமிழ்நாட்டில் நடந்தது போன்று சித்தரித்துக் காட்டியுள்ளதாகக் காவல் துறை இயக்குநர் உடனடியாக விளக்கம் தந்தார். அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரும், காவல் துறையினரும், வடமாநிலத்தவர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களில் குறிப்பாக உணவு விடுதிகள், கட்டுமான நிறுவனங்கள், பல்வேறு தொழிற்சாலைகள் போன்றவற்றுக்குச் சென்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழ் நாட்டில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என் பதைத் தெளிவுபடுத்தி, அவர்களது அச்சத் தைப் போக்கக்கூடிய வகையில் நடவடிக் கைகளில் ஈடுபட்டனர்.
பீகார் முதலமைச்சருடன் பேச்சு
பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமாரை நானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு வடமாநில தொழிலாளர்களுக்கு அளிக்கப் பட்டு வரும் பாதுகாப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு 7.3.2023 அன்று பீகார் முதலமைச்சரை நேரடியாகச் சந்தித்து வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு மாநில அரசு மேற் கொண்டுவரும் நடவடிக்கை குறித்துப் பேசியிருக்கிறார் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
பீகார் மாநில ஊரகவளர்ச்சித்துறை செயலாளர் பால முருகன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழு தமிழ்நாட்டிற்கு வந்து சென்னை, திருப்பூர்,கோவை உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளோடு கலந்தாலோசனை செய்த தோடு, பீகார் மாநில தொழிலாளர்களையும் சந்தித்துப் பேசினார்கள். இந்தக் குழுவினர் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு அதுகுறித்து பத்திரிகைகளுக்குப் பேட்டியும் அளித்திருக் கின்றனர்.
88 வழக்குகள் பதிவு
7.3.2023 அன்று திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் வடமாநிலத் தொழி லாளர்களைச் நானே நேரிடையாக சந்தித்து அவர்களின் பாதுகாப்புக்காக அரசு மேற்கொண்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கை கள்குறித்து விளக்கி பேசினேன். இந்த விவகாரம் தொடர்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 178 பேர் கைது செய்யப்பட்டார்கள். குறிப்பாக, தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படையினர் தெலங்கானா, பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு நேரடியாகச் சென்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் குமார் என்ப வரை 6.3.2023 அன்று தெலங்கானாவிலும், பிரசாந்த் குமார் என்பவரை 11.3.2023 அன்று ஜார்கண்ட் மாநிலத்திலும், உபேந்திர சஹானி என்ப வரை 18.3.2023 அன்று பீகாரிலும் கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். வதந்தி காட்சிப் பதிவுகளைப் பரப்பிய உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் என்பவர்மீதும் வழக்கு தொடரப்பட்டு, உயர்நீதிமன்ற பிணை பெற் றுள்ளார்.
பிற மாநில அரசுகள் பாராட்டு
அது மட்டுமின்றி, யூடியூப் சேனல் நடத்தி வரும் பீகார் மாநிலத்தைச்சேர்ந்த மணிஷ் காஷ்யப் என்பவர் கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட் டுள்ளார். எதிர்காலத்தில் சமூக வலைத்தளங் களில் பரப்பப்படக்கூடிய வதந்திகளால் உல களவில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை பெரு மளவில் இருக்கும் என்று பலராலும் கூறப் படுகின்ற நிலையில், வடமாநிலத் தொழி லாளர்கள் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பிற மாநில அரசுகளும் மனந்திறந்து பாராட்டின. வந் தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்த வடமாநிலத்தவர்களையும் நமது மாநிலத்தவராக கருதி அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவ டிக்கைகளையும் மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசு விரைவாக நடவடிக்கை எடுத்ததால்தான் தமிழ்நாட்டிலும், சில வடமாநிலங்களிலும் கொந்தளிப்பு எழாமல், அது தவிர்க்கப்பட்டது.
-இவ்வாறு அவர்பேசினார்.
No comments:
Post a Comment