பெங்களூரு: ஏப் 19 கருநாடக பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கரு நாடக சட்டமன்றத் தேர்தலையொட்டி ஜெய் பாரத் என்ற பெயரில் கோலாரில் காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பிரதமர் மோடியை கடுமையாக தாக்கிப் பேசினார்.
அதைத்தொடர்ந்து பீதரில் நடை பெற்ற காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட் டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
அய்தராபாத்_-கரு நாடகா அதாவது கல்யாண கருநாடக பகுதியில் உள்ள 6 மாவட்டங்களுக்கு அரசியல் சாசன சிறப்புத் தகுதி முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது. இதனால் இந்தப் பகுதி மக்கள் பயன் அடைந் துள்ளனர். காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் ஏழைகள், விவசாயிகள், சிறு வியாபாரிகளின் மேம் பாட்டிற்கு பயனளிக்கும் வகையில் உள்ளது. இவை பெரும் பணக்காரர் களுக்கானது அல்ல.
பிரதமர் மோடி அதானிக்கு விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்பட இந்தியாவின் வளங்களை வழங்கி யுள்ளார். பிரதமருக்கும், அதானிக்கும் என்ன தொடர்பு என்று நான் நாடா ளுமன்றத்தில் கேள்வி கேட்டேன். பா.ஜனதா ஊழல் களை பற்றி நான் கேள்வி எழுப்பினேன். அதைத் தொடர்ந்து எனது மக்களவை உறுப் பினர் பதவியை தகுதி நீக்கம் செய்து விட்டனர். அதானியின் ஷெல் நிறு வனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி யாருடையது என்று கேட்டேன்.
வாய் திறக்கவில்லை _ அதன் பிறகு என்னை பேச அனுமதிக்கவில்லை. எனது ஒலி வாங்கியை அணைத்து விட்டனர். நாடாளுமன்றத்தில் ஊழல் குறித்து நான் கேள்வி எழுப்பியதால் பா.ஜனதாவினர் பயந்துவிட்டனர். அத னால் தான் என்னை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கிவிட்ட னர். கருநாடகத்தில் ஒப்பந்ததாரர்கள் பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினார். இதுவரை இது குறித்து பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. அது ஏன்?. காவல் உதவி ஆய்வாளர்கள் நியமன முறைகேடு, கருநாடக சோப்பு நிறுவன முறைகேடுகள் உள்பட பல் வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
ஆனால் பிரதமர் மோடி, தான் ஊழ லுக்கு எதிரானவர் என்று சொல்கிறார். கருநாடகத்தில் என்ன நடந்து கொண் டி ருக்கிறது. 40 சதவீத கமிஷன் பெறும் பா.ஜனதாவுக்கு இந்த முறை தேர்தலில் 40 இடங்களை மட்டுமே கருநாடக மக்கள் வழங்க வேண்டும். 40 சதவீத கமிஷன் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையடித் துள்ள இந்த பணத்தை கொண்டு மாற்று கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கு வார்கள். அதனால் கருநாடக மக்கள் ஊழலுக்கு எதிராக, 40 சதவீத கமிஷ னுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். 2011ஆ-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட வேண்டும். மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற அளவை நீக்க வேண்டும். பிற்படுத் தப்பட்ட மக்கள் குறித்து பேசும் மோடி, ஜாதிவாரி மக்கள்தொகை கணக் கெடுப்பு அறிக் கையை வெளியிட மாட்டார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் இந்த அறிக்கையை நாங்கள் வெளியிடுவோம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
No comments:
Post a Comment