விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் நிறுவன பதிவுச் சான்றிதழ் வழங்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 20, 2023

விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் நிறுவன பதிவுச் சான்றிதழ் வழங்க வேண்டும்

சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்

சென்னை, ஏப். 20- 10 அல்லது அதற்கு மேற்பட்ட வேலை ஆட்கள் பணிபுரி கின்ற நிறுவனம் விண் ணப்பித்த 24 மணி நேரத் திற்குள் உரிமையாளருக்கு பதிவுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது தொடர் பான சட்ட மசோதா சட்டமன்றத்தில் (19.4.2023) தாக்கல் செய் யப்பட்டுள்ளது. 

இந்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு கடை கள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்ட முன் வடி வில் இடம்பெற்றுள்ள முக் கிய அம்சங்கள் வருமாறு:

வணிகம் தொடங்கப் பட்ட தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் பதிவுக்காக விண்ணப் பித்து பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும்.

விண்ணப்பித்த நப ருக்கு 24 மணி நேரத்துக் குள் பதிவுச் சான்றிதழ் வழங்க வேண்டும். பதிவு சான்றிதழ் ஆனது நிறு வனத்தின் முக்கியமான இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும். விண்ணப்ப படிவத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் மாற்றம் செய்திருந்தால் 30 நாட் களுக்குள் தொழில்துறை ஆய்வாளருக்கு தெரியப் படுத்த வேண்டும். திருத் தம் செய்யப்பட்டதற்கான புதிய பதிவுச் சான்றிதழை பெற வேண்டும். 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடை கள் மற்றும் நிறுவனங் களில் பணிபுரியும் நபர்க ளின் வேலை நேரம், வார ஓய்வு, விடுமுறைகள், உடல் ஆரோக்கியம் மற் றும் பாதுகாப்பு பற்றிய வேலை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துகிறது. 

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment