புதுடில்லி, ஏப்.9 - கரோனாவுக்குப் பின் உல களாவிய பட்டினி, வறுமை அதிகரித்துள்ள தாகவும், 2023-ஆம் ஆண்டில், பொருளாதார மந்தநிலை பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
கரோனா பெருந்தொற்றுக்கு பின், 2021-ஆம் ஆண்டு சீரிய முறையில் சென்று கொண்டிருந்த உலகப் பொருளாதாரம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் பாதிக்கும் கீழாக குறைந் தது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் 2022 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் 6.1 சதவிகிதம் என்ற அளவில் இருந்து 3.4 சதவிகிதம் என குறைந்தது. கரோனாவுக்குப் பின் உலக ளாவிய வறுமை மற்றும் பட்டினி அதிகரித்து உள்ளது. இவ்வாறு கடந்த ஆண்டு உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சுணக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை மற்றும் ஆமை வேக பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டிலும் நீடிக்கும். அடுத்த
5 ஆண்டுகளுக்கு உலக பொருளாதார வளர்ச்சி 3 சதவிகிதத்திற்கும் குறைவாகவே காணப் படும்.
கடந்த 20 ஆண்டுகளில் 3.8 சதவிகிதம் என்ற குறைந்த அளவிலேயே உலக பொரு ளாதார மந்தநிலை சுழன்று கொண்டு இருந்தது. தற்போது 3 சதவிகிதத்திற்கும் குறைவான பொருளாதார மந்தநிலையானது, கடந்த 1990-ஆம் ஆண்டிற்குப் பிறகு கணக்கிடப்பட்ட குறைந்த நடுத்தர கால வளர்ச்சி அளவாகும். உலக பொரு ளாதாரத்தின் மெதுவான வளர்ச்சி பல்வேறு நாடுகளுக்கு பேரடியாக இருக்கும். 90 சதவிகித முன்னேறிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதங்களில் சரிவைக் காணும் என கணிக் கப்பட்டு உள்ளது. வளர்ந்து வரும் பொரு ளாதாரத்தில் ஆசிய நாடுகள் முக்கிய பங் காற்றி வருகின்றன. குறிப்பாக 2023-ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியின் பாதி பங்கை இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு ஆசிய நாடுகள் கொண்டிருக்கும். அடுத்த வாரம் பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்த கால கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொருளாதார சுணக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கை கள் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்களை தொடர்ச்சியாக உயர்த் துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. இவ்வாறு கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment