புதுடில்லி, ஏப். 10 - தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (NCERT) அண்மையில் வெளியிட்ட சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பாடத் திட்டத்தில் பல்வேறு மோசடி வேலைகளை அரங்கேற்றியது.
குடிமையியல் பாடப் புத்தகத்திலிருந்து, ‘பனிப் போர் காலம்’ மற்றும் ‘உலக அரசியலில் அமெரிக்க மேலாதிக்கம்’ ஆகிய அத்தியாயங்களையும், அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்திலிருந்து, ‘சுதந்திர இந் தியாவில் அரசியல்’ புத்தகத்தின் இரண்டு அத்தி யாயங்களையும் நீக்கியது. ‘மக்கள் இயக்கத்தின் எழுச்சி’ மற்றும் ‘தனிக் கட்சி ஆதிக்கத் தின் சகாப்தம்’ ஆகியவை நீக்கப்பட்டன. இந்தியாவில் சோசலிஸ்டு கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எழுச்சி மற்றும் சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் காங்கிரசின் ஆட்சி போன்ற தகவல்கள் இந்த அத்தியாயங்களில் இடம் பெற்றிருந்த நிலையில் அவையனைத்தும் நீக்கப்பட்டன. இதுதவிர, வரலாறு பாடப் புத்தகத்திலிருந்து முகலாய சாம்ராஜ்யம் தொடர்பான அத்தியாயமே, அதாவது- (முகலாய தர்பார், 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகள்) இந்திய வர லாறு - பகுதி II - நீக்கப்பட்டன. இந்தி புத்தகத்தில் இருந்து சில பத்திகள் மற்றும் கவிதைகள், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களின் பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டன.
இந்தப் பின்னணியில்தான், அதே சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு அரசியல் அறி வியல் பாடப்புத்தகத்தில், 1973-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட சீக்கியர்களின் ஆனந்த்பூர் சாஹிப் தீர்மானம் “பிரிவினைவாத தீர் மானம்” என்று கொச்சைப்படுத்தப்பட்டு உள்ளதாக சீக்கிய அமைப்புகள் தற்போது கொந்தளித்துள்ளன. ‘சுதந்திர பாரத் மே ராஜ்நிதி’ என்ற 7-ஆவது அத்தியாயத்தில் தான் இந்த பிராந்திய சுயாட்சி கோரிக்கை - அதாவது பிரிவினைவாதம் எழுப்பப் பட்டதாக என்சிஇஆர்டி கூறியுள்ளது. அதா வது, “ஆனந்த்பூர் சாஹிப் தீர்மானம், ஒன்றிய-மாநில உறவுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்ற கோருகிறது. கூட்டாட்சி முறையை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதனை தனி சீக்கிய நாட்டிற்கான கோரிக்கையாகவும் நாம் புரிந்து கொள்ளலாம்” என்று குறிப் பிட்டுள்ளது. என்சிஇஆர்டி-யின் இந்த அவதூறுக்கு, சிரோமணி குருத்வாரா பர் பந்தக் கமிட்டி (எஸ்ஜிபிசி) உள்ளிட்ட பல சீக்கிய அமைப்பு கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளன. “சீக்கியர்கள் குறித்துப் பரப்பப் படும் தவறான தகவல்களுக்கு கடும் கண் டனம் தெரிவித்துக் கொள்கிறோம். சீக் கியர்கள் தொடர்பான வரலாற்றுக் குறிப் புகள் சிதைக்கப்பட் டுள்ளன. சீக்கியர்களைப் பிரிவினைவாதிகளாகக் காட்டக்கூடாது. அந்த வாசகத்தை உடனடியாக நீக்க வேண்டும்’’ என்று எஸ்ஜிபிசி தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி கூறியுள்ளார்.
2023-2024 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்தில் காந்தியாரின், இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்து இடம்பெற்றிருந்த தகவல்கள் நீக்கப் பட்டிருப்பதற்கும் தாமி கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்த கருத்துகளை எல்லாம் அகற்றுவது வகுப்புவாத செயல். ஒன்றிய அரசு தனது சொந்த நலன் கருதி இந்த மாற்றங்களைச் செய்வது வருத்தமளிக்கிறது. சிறுபான்மையினர் பற்றிய வாசகங்கள் நீக்கப்படுகின்றன. இது திட்டமிடப் பட்ட சதி” என்று கூறியுள்ளார். ஆனந்த்பூர் சாஹிப் தீர்மானம் குறித்துப் பேசிய அவர், “இந்தத் தீர்மானம் ஒரு வரலாற்று ஆவணம். அதில் ஒன்றும் தவறில்லை. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்பதையே அது வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment