மெட்ரோ ரயில் பணிக்காக கோயில் இடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

மெட்ரோ ரயில் பணிக்காக கோயில் இடிப்பு


பெரம்பூர், மார்ச் 19  மெட்ரோ ரயில் பணிக்காக சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள பூங்காக்கள், கோயில்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட ஓட்டேரி - கொன்னூர் நெடுஞ்சாலையில் ஆதி சேமாத்தம்மன் கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோயில் உள்ள இடத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது. இதற்காக இந்த கோயிலை அகற்ற வேண்டுமென மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் சென்னை திரு.வி.க. நகர் மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கோயிலை திரு.வி.க. நகர் மண்டல அதிகாரிகள் அகற்றச் சென்றபோது அப்பகுதி மக்கள் மற்றும் இந்து அமைப்பினர், எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் கோயிலில் உள்ள  'கடவுளர்' சிலைகள் அனைத்தும் எந்தவித பாதிப்பும் இன்றி வேறு இடத்திற்கு மாற்றப்படும் எனவும், மேலும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் திரு.வி.க. நகர் மண்டல அதிகாரி சார்பில் உறுதி அளிக்கப்பட் டது.  இதனையடுத்து நேற்று முன்தினம் (17.3.2023) அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலில் இருந்த 'கடவுளர்' சிலை உட்பட அனைத்து விக்கிரகங்கள் மற்றும் பொருட்களை கையகப்படுத்தி, அவற்றை அருகாமையில் உள்ள பெருமாள் கோயிலில் ஒப்படைத்தனர். அதனை பெருமாள் கோயில் நிர்வாக அலுவலர் திவ்யா பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து நேற்று (18.3.2023) காலை திரு.வி.க. நகர் மண்டல அதிகாரி முருகன் தலைமையில், செயற்பொறியா ளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர் சரஸ்வதி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் கோயிலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். காலை 5 மணிக்கு தொடங்கிய இப்பணி 8 மணிக்கு முடிந் தது, முழுவதுமாக கோயில் இடிக்கப் பட்டது.  


No comments:

Post a Comment