கற்பனையில் வாழும் பாஜக -மருது சகோதரர்களின் படங்களை திருடி கன்னடர்களாக மாற்றிய மோசடி!
பிரதமர் மோடி கருநாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா நகருக்கு வருகை தந்த போது அவரை வரவேற்க வைத்த பதாகைகளில் உரி கவுடா, நஞ்சேகவுடா என இருவரின் படங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த உரி மற்றும் நஞ்சே என்பன கற்பனைக் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் ஆகும். ஆனால் சமீபகாலமாக இவர்கள் இருவரையும் திப்பு சுல்தான் கொன்று விட்டதாகவும், ஹிந்து மாவீரர்களைக் கொலை செய்த திப்புவை ஆதரிக்கும் காங்கிரசுக்கா உங்கள் வாக்கு? என்றும் பரப்புரை செய்து வருகின்றனர். இந்த நிலையில் உரி மற்றும் நஞ்சே கவுடா படங்களில் தமிழ்நாட்டின் மருது சகோதரர்கள் படங்களை வைத்துள்ளனர்.
காரணம் உரி மற்றும் நஞ்சே கவுடா என்பன வீரதீரக் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள். அப்படிப்பட்டவர்கள் இருந்ததே கிடையாது, அப்படி இருக்க, திடீரென்று இவர்களால் உருவாக்கப் பட்டதற்கு உருவம் கிடைக்காமல் தமிழ்நாட்டில் சிவகங்கைச்சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் படங்களைப் பதித்து கருநாடக பாஜக கொண்டாடி வருகிறது.
பித்தலாட்டமே, உன் பெயர்தான் பிஜேபியா?
No comments:
Post a Comment