புதுடில்லி, மார்ச் 1- மனிதக் கழிவு களை மனிதர்களே அள்ளும் முறையை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக டாக்டர் பல்ராம் சிங் என்பவர் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் (பிஅய்எல்) கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றம் தனது 2014ஆம் ஆண்டு உத்தரவில் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களை கண் டறிந்து அவர்களது மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், மாநில அரசு களுக்கும் வழிமுறைகளை வழங்கி யது. ஆனால் அது இன்னும் நடை முறைப்படுத்தப்படவில்லை. இவ் வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஆர். பட், தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக 6 வாரங்களுக்குள் அறிக்கையை ஒன்றிய அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தர விட்டனர். மேலும் 2014இல் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின் படி நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டது.
No comments:
Post a Comment