தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் : வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் : வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

தஞ்சாவூர், மார்ச் 29- தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட்டு நாட்டு நலனை மேம்படுத்த முன்வர வேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கி மேனாள் தொழிற்சங்க தலைவர் களின் கூட்டமைப்பு (AFCCOM) வலி யுறுத்தியுள்ளது.

26.3.2023 அன்று தஞ்சாவூர் AIIEA மாளிகையில் சரோஜ் நினை வகத்தில் இக்கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பி.இராமன் தலை மையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் டி.வி.சந்திரசேக ரன், ஸ்டேட் வங்கி ஊழியர் சங் கத்தின் மேனாள் பொதுச்செய லாளர் டி.சிங்காரவேலு, மூத்த தலைவர்கள் மதுரை எம்.முரு கையா, என்.சுப்பிரமணியன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

நிர்வாகக் குழுவில் விவாதிக்கப் பட்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள்  - பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டவை வருமாறு:-

ஒன்றிய அரசும் இந்திய வங்கி கள் நிர்வாகமும் (IBA) வங்கி ஓய் வூதியர்களின் ஓய்வூதியத்தை தாம தமின்றி மறு சீரமைப்பு  செய்ய முன் வரவேண்டும்.

இந்திய ஸ்டேட் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூ தியர்களுக்கு சுகாதார காப்பீட்டு பிரிமியத்தை வங்கியே செலுத்த முன்வர வேண்டும்.

காப்பீடு பிரிமியத்துக்கு ஜி.எஸ்.டி. பிடித்தம் செய்யும் தவறான முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மருந்தகங்களை நிறுவ இந்திய ஸ்டேட் வங்கி முன் வரவேண்டும்.

வாழ்வாதாரம் இன்றி வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மூத்த குடிமக்களுக்கு மாவட்டம்தோறும் அரசு இல்லங்களை அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருக்கும் L.I.C., ONGC, BHEL, BSNL  ஆகிய பொதுத்துறை நிறுவனங் களை திட்டமிட்டு பலவீனப்படுத்தி தனியாருக்கு தாரை வார்க்கும் நாட்டு நலனுக்கு எதிரான முயற் சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

நாட்டின் நடைமுறையில் இருந்த 44 தொழிலாளர் நல சட்டங்களை ஒன்றிணைத்து நான்கே தொழிலாளர் சட்டங் களாக மாற்றி நடைமுறைப்படுத்த எண்ணும் ஒன்றிய அரசின் போக்கு தொழிலாளர் நலனுக்கும் முன்னேற்றத்துக்கும் எதிரானது. எனவே, ஒன்றிய அரசு அதை கைவிட்டு நாட்டு நலனை மேம் படுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இப்பொதுக்குழு கூட்டத்தில் எம்.சந்திரா கில்பர்ட், எம்.ரகுநா தன், என்.பாண்டுரங்கன், வீ.பூமி நாதன், ஆர்.லோகநாதன், எஸ். கருணாகரன், எஸ்.பாலசுப் பிர மணியன், அகமது உசைன், எம்.எம்.செல்வராஜ், எம். ராஜ கோபால், இக்கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் எம்.கே.மூர்த்தி உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

No comments:

Post a Comment