சென்னை விமான நிலையத்தில் தமிழ் பேசும் அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

சென்னை விமான நிலையத்தில் தமிழ் பேசும் அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 19- சென்னை விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்ததும் மீண்டும், உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரையும் கொண்ட பெயர் பலகைகளை வைக்க வேண்டும். சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்த வேண்டும் என்று, திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடந்த, சென்னை விமான நிலைய அபிவிருத்தி ஆலோசனைக் குழு கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வலியு றுத்தப்பட்டது.

சென்னை விமான நிலைய அபிவிருத்தி பணிகளுக்காக ஆலோசனை குழுவை, இந்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம், தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் தலைமையில் அமைத்துள்ளது. இந்தக் குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி, ஆலோசனை நடத்தும். இந்தக் குழுவில் சென்னை விமான நிலைய இயக்குநர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், விமான நிலைய விமான நிறுவன உயர் அதிகாரி கள் உள்ளனர்.இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (18.3.2023) சென்னை விமான நிலைய கூட்ட அரங்கில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் நடந்தது. அதில் அமைச்சர் அன்பரசன், விமான நிலைய இயக்குநர் சரத் குமார், செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத், சட்டமன்ற உறுப் பினர்கள் கருணாநிதி, ராஜா, உயர் அதிகாரிகள் கலந்து கொண் டனர்.

சென்னை விமான நிலையத் தில் தற்போது உள்ள இரண்டாவது ஓடு பாதை நீளம் அதிகரிப் பதற்கு, நிலம் கையகப்படுத்தப் படும் பணியை விரைந்து செயல் படுத்த வேண்டும். அதோடு தற் போது சென்னை விமான நிலை யத்தில் இரண்டு ஓடு பாதைகளும் ஒரே நேரத்தில் செயல்படுத்தப் படுகின்றன.ஆனால் அதில் சில பிரச்சினைகள் உள்ளன. இரண் டாவது ஓடு பாதைக்கு பின்பகு தியில் அமைந்துள்ள கொளப் பாக்கம் கிராமத்தில் உயர்ந்த கட்டடங்கள், செல்போன் டவர்கள், கோபுரம் மின் விளக்கு கம்பங்கள், உயர்ந்த மரங்கள் போன்றவைகள் விமானங்கள் வந்து தரையிறங்குவதற்கு இடை யூறாக இருக்கிறது. எனவே அந் தப் பகுதியில் உள்ள 91 உயர்ந்த கட்டடங்கள் உயரங்களை குறைக்கும் படி கூறி, அந்தக் கட்டட உரிமையாளர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே இந்திய விமான நிலைய ஆணையம் அறிவிக்கை கள் வழங்கி உள்ளன.

ஆனால் கட்டட உரிமையா ளர்கள் இதுவரையில் தங்கள் கட்டிடங்களை உயரங்களை குறைக்க எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதைப் போல் அந்தப் பகுதியில் உள்ள உயர்ந்த மரங்கள், அலைபேசி கோபுரங்கள், மின்விளக்கு கம்பங்கள், போன்றவைகள் அகற்றப்படுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.அதற்கு குழுவின் தலைவர் ஆன டி.ஆர்.பாலு, குடியிருக்கும் மக்களின் வீடுகளை இடிப்பது, என்பது சரியாக இருக்காது. எனவே அதற்குப் பதிலாக மாற்று வழி ஏதாவது உண்டா என்பது பற்றி, ஏர்போர்ட் அத்தாரிட்டி மறு சர்வே செய்ய வேண்டும். மேலும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம், விமான நிலைய நிர்வாகிகள் பணிகளுக் காக இடம் கேட்டு, அவர்கள் தரும் நிலையில் உள்ளனர். அந்த இடத்தை மாநில அரசு மூலமாக, இந்திய விமான நிலைய ஆணை யத்திடம் ஒப்படைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் சென்னை புதிய விமான நிலையம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும், உள்நாட்டு விமான நிலைய முகப்பில் காமராஜர் விமான நிலையம் என்றும், பன்னாட்டு விமான நிலைய முகப்பில், அண்ணா விமான நிலையம் என்றும் பெயர் பலகைகளை, இந்திய விமான நிலைய ஆணை 

யம் மீண்டும் வைக்க வேண்டும் என்றும், அதிகாரிகளிடம் வலி யுறுத்தப்பட்டது.சென்னை விமான நிலையத்தில், தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகள் தெரியாத மத்திய தொழில் பாது காப்புப் படை வீரர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதனால் அவர்களுக்கும் பயணி களுக்கும் இடையே பிரச்சினை கள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, தமிழ் மட்டும் தென் னிந்திய மொழிகள் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களை அதிக அளவு சென்னை விமான நிலையத்தில் பணியில் அமர்த்த வேண்டும்.

அதோடு சென்னை பன் னாட்டு விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் மிகக் குறைந்த அளவு பணியில் இருப் பதால், பயணிகள் குடியுரிமை சோதனையின் போது நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்படு கின்றனர். எனவே உடனடியாக கூடுதல் குடியுரிமை அதிகாரி களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதை விமான நிலைய உயர் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக கூறினர்.

No comments:

Post a Comment