திருநெல்வேலி, மார்ச் 23- தமிழ் நாட்டில் முதன்முறையாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனத் தில் சூரிய சக்தியில் இயங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் குற்ற நிகழ்வு களை தடுக்கவும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் 2 நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த இரு வாகனங்களில் சூரிய சக்தியுடன் இயங்கக் கூடிய சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேம ராக்கள் அமைக் கப்பட்ட நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்களை திரு நெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவ ணன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: இதன் மூலம் நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்ற நிகழ்வு களை தடுக்கவும், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கண் காணிக்கவும் முடியும். மேலும் முக்கிய பிரமுகர்களின் பாது காப்புப் பணிக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார். தனிப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ், தொழில்நுட்ப பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment