மேகாலயாவில் ஆளுநர் ஹிந்தியில் உரையாற்றுவதா? எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

மேகாலயாவில் ஆளுநர் ஹிந்தியில் உரையாற்றுவதா? எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

4

ஷில்லாங், மார்ச் 21 மேகால யாவில் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (20.3.2023)தொடங்கியது. ஆளுநர் பாகு சவுகான் கூட்டத் தொடரை தொடங்கி வைத்துப் பேசினார். 

கடந்த பிப்ரவரியில் ஆளுநர் பொறுப்பேற்ற அவரது கன்னி உரை இதுவாகும். அங்கு பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) ஆளும்கட்சியாக உள்ளது. கான்ராட் சங்மா கடந்த 9-ஆம் தேதி 2ஆ-வது முறையாக முதலமைச்சராக பொறுப் பேற்று உள்ளார். மக்கள் குரல் கட்சி (வி.பி.பி.)  எதிர் கட்சிகளில் ஒன்றாக செயல்படு கிறது. அதற்கு 4 சட்டமன்ற உறுப் பினர்கள் உள்ளனர். நேற்று, ஆளுநர் சவுகான் சட்ட சபையில் ஹிந்தியில் உரையாற் றத் தொடங்கியதும் வி.பி.பி. கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குறுக்கிட்டு, ஆளுநர் ஆங்கி லத்தில் உரையாற்ற வேண்டும் என்று சட்டமன்றத் தலைவரி டம் முறையிட்டனர். அதற்கு சட்டமன்ற தலைவர் சங்மா எதிர்க்கட்சியினர் கோரிக்கையை ஏற்காததால், அவர்கள் வெளி நடப்பு செய்தனர்.

No comments:

Post a Comment