மானாமதுரை, மார்ச் 23- சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக் காலை எச்சங்களை வர லாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மானா மதுரை வட்டம், காட்டூ ரணி அய்யனார் கோயி லின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வித்தி யாசமான கற்கள் இருப் பதாக கிடைத்த தகவலின் பேரில், வரலாற்று ஆர் வலர் மீனாட்சி சுந்தரம், கமுதி பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரியின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் தங்கமுத்து ஆகியோர் அண்மையில் அந்தப் பகுதியில் கள ஆய்வு செய்தனர். இது குறித்து அவர்கள் 21.3.2023 அன்று செய்தி யாளர்களி டம் கூறியதா வது:
இந்தப் பகுதியில் ஏரா ளமான இரும்பு உருக்கு கழிவுகள் பெரும் குவிய லாகக் காணப்படுகின்றன. இதில் பல துண்டு குழாய் களும் உள்ளன. இந்தப் பகுதியில் அதிக அளவில் இரும்பு தாதுப் பொருள் அடங்கிய தரமான செம்பூரான் பாறைகள் காணப்படுகின்றன. இதில் இரும்பு மூலப் பொருள் இருப்பதையும் அதனை எரியூட்டி உருக்கினால் இரும்புப் பொருள்கள் செய்யலாம் என்பதையும் இப்பகுதி மக்கள் தெரிந்து வைத்தி ருந்தனர் என்று அறிய முடிகிறது.
பழங்காலத்தில் இங்கே வாழ்ந்த மக்கள் இரும்புப் பொருள்க ளான கத்தி, கோடரி, ஈட்டி, வாள் போன்ற ஆயுதங்களை தயாரிக்கும் தொழில் கூடமாக இப் பகுதியைப் பயன்படுத்தி யிருக்கலாம்.
சுமார் 2000 ஆண்டு களுக்கு முன்பு இந்தப் பகுதி பெருங்கற்காலத் தைச் சேர்ந்த ஆதி மனி தர்களின் வாழ்விடப் பகு தியாக இருந்திருக்கலாம். இரும்பு உலைக் கழிவுகள் கருகிய நிலையிலும் செம் பூரான் கற்கள் சிதைந்த நிலையிலும் அதிக அள வில் காணப்படுகின்றன. சுடுமண்ணால் செய்யப் பட்ட பல குழாய்கள் மேற்பரப்பில் சிதைவுற் றுக் கிடக்கின்றன.
இரும்பு உருக்கும் உலைகளில் பயன்படுத் தப்படும் கெண்டியின் பாகங்கள் இங்கு சிதைந்து கிடக்கின்றன.
இந்தப் பகுதியில் தொல்லியல் துறை முறை யான ஆய்வை மேற் கொண்டால், சிவகங்கை மாவட்டத்தின் பழங் கால இரும்பு உருக் காலையின் தொன்மை யையும் வரலாறையும் அறியலாம் என்றனர்.
No comments:
Post a Comment