பள்ளிகளில் முதலமைச்சரின் "காலை சிற்றுண்டித் திட்டத்தை" பின்பற்றுகிறது அமெரிக்கா
மினசோட்டா, மார்ச் 20- திராவிட மாடல் ஆட்சி என்றால் சமூக நீதிக்கான ஆட்சி. அதன் செயல்திட்டங்கள் சமூகத்தில் அடித்தட்டிலிருந்து ஒடுக் கப்பட்டவர்களிலிருந்த அனைத்து தரப்பு மக்களின் நலவாழ்வை உறுதி செய்கிற மகத்தான சாதனை சரித்திரம் படைத்து வருகின்ற ஆட்சியாக உள்ளது.
தமிழ்நாட்டின் "திராவிட மாடல்" ஆட்சியின் திட்டத்தை முன்னோடித் திட்டமாகக் கொண்டு தற்பொழுது வளர்ந்த நாடான அமெரிக்க நாட்டி லும் பின்பற்றப்படுகிறது அது தான் பள்ளிகளில் மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.
தி.மு.க ஆட்சி அமையும் போதெல் லாம் நாட்டிற்கே வழிகாட்டும் ஆட்சியாக அவை இருக்கும். சமூக நீதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, அவர்களின் மேம்பாடு, தொழில் வளர்ச்சி, கல்வி உதவி என அடுக்கடுக்கான புதிய திட்டங்களை செயல்படுத்தி நாட்டிற்கே தமிழ்நாடு முன்னுதாரணமாகத் திகழும் வகையில் இருக்கும்.
அந்தவகையில் தற்போது இந்தியா மட்டுமல்லாது, உலக நாடுகளே திராவிட மாடல் வளர்ச்சியை பின்பற் றும் அளவிற்கு ஆட்சியை சிறப்பாக கொண்டுச் சென்றிருக்கிறார் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின்.
குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கொண்டு வந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு "காலை சிற்றுண்டி திட்டம்" உலக நாடுகளுக்கு இடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன்படி தங்களுடைய நாடுகளிலும் அத்தகைய திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
நீதிக்கட்சி ஆட்சியில் ஒரு நூற்றாண் டுக்கு முன்பே, சென்னை மாநகரத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்களுக்கு பகல் உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் அன்றைய மேயர் தியாகராயர். அதன் பிறகு காமராசர் ஆட்சிக்காலத்தில் பகல் உணவுத் திட்டம் - மக்கள் நிதி உதவியோடு தொடங்கி, பிறகு அரசுத் திட்டமாகி, நல்ல பலன் தந்தது. பின்னர் மேனாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் அது ‘சத்துணவு திட்டமாக’ வளர்ந்தது.
அதனைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் ஆட்சியில், மாணவர்களுக்கு வாரம் 2 முட்டை அல்லது வாழைப் பழங்கள் கூடுதலாகச் சேர்த்த அசல் சத்துணவாகவே பரிமளித்தது. பின்னர் அந்த திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை - வரலாற் றைப் பாராட்டியது. அந்த சாதனையை இன்றைய கல்விப் புரட்சி என்றே சொல்லலாம்.
குறிப்பாக, அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை சிற்றுண்டி சாப்பிட வசதியில்லாததாலோ வாய்ப்பில் லாததாலோ வேறு காரணங்களாலோ பசியோடு வகுப்பறைகளுக்குச் சென்று, பாடங்களில் கவனம் செலுத்த இயலாத சூழல் இருந்து வந்தது.
‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர், இதனைச் சரியாக உணர்ந்து ஆரம்பப் பள்ளிகளில் - நல்ல சுகாதாரமான காலைச் சிற்றுண்டியை அக்குழந்தைகளுக்கு அளிக்கும் திட் டத்தை 15.9.2022 அன்று தொடங்கி வைத்து, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மணிமகுடத்தில் மேலும் ஓர் ஒளி முத்தைப் பதித்துள்ளார்.
ஒரு மாணவருக்கு 12.75 ரூபாய் கூடுதல் செலவு என்று கணக்கிடப் பட்டுள்ளது. அதை நமது முதலமைச்சர் ‘செலவு’ அல்ல; அது எதிர்காலத்திற்கான ‘சமூக முதலீடு’ (சோசியல் இன்ஸ் வெஸ்ட்மெண்ட்) என்று பொருத் தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகள் சில வீடுகளில் சிற்றுண்டி தயாராக இருக்கும்போது, காலதாமதம் என்று சாப்பிடாமல் பள்ளிக்கு அவசர அவசரமாக புறப் பட்டுச் செல்லும் நிலையில், அவர்களின் வயிற்றுப் பசி தீர்த்து, கல்வி அறிவுப் பசி போக்கும் அரும்பணி மலர்ந்துள்ளது.
இந்த சாதனைத் திட்டத்தை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக அய்க்கிய அமெரிக்க நாட்டின் மாநிலங்களுள் ஒன்றான மினசோட்டாவில் பள்ளி மாணவர் களுக்கு உணவு அளிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் மினசோட்டா கவர்னர் டிம் வால்ஸ் மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பெற் றோர் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அவர்களுக்கு இலவச காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தில் கையெழுத் திட்டுள்ளார். இதனால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment