எங்கள் தாய்மொழியை தள்ளி வைக்கச் சொல்லுவதா? தொலைந்து விடுவீர்கள்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை!
சென்னை, மார்ச் 30 குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண் டாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தயிர் பாக்கெட்களின் மீது தஹி என்ற ஹிந்திச் சொல்லை குறிப்பிட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு: “எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் - தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வு களை மதியுங்கள். இந்தி திணிப்பை நிறுத்துங்கள்என்றும் குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” என அந்தப் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment