அய்யா வணக்கம்!
அங்கு என்ன பார்க்கிறீர்கள்?
அயராது வீசும் அலைகளையா?
ஓயாத உங்கள் உழைப்பறிந்து
அந்த அலைகள்
நாணித் தலைகுனிந்து
வீழ்வதைப் பார்த்தீர்களா?
கடல் தாண்டும் பறவை கூட
கரை அறியும்!
களம் காணும் உங்கள் பயணம்
தொடர் பயணம் அல்லவா?
சிங்கக் குரல் கேட்டு
பொங்கு கடல் அடங்கும்!
ஆர்ப்பரித்து எழுந்தால்
ஆரியமும் குடல் நடுங்கும்!
கடற்கரை உங்களுக்குப்
பிடித்த இடம் என்பது தெரியும்.
ஏன் பிடிக்கும் என்பது
இப்போதல்லவா புரிகிறது.
சபாஷ்! சரியான போட்டி.
தொன்னூறிலும் தொய்விலா
தொண்டு கண்டோம்!
கடலலையினும் மேலான
களப்பணி கண்டோம்!
அய்யா! ஒரு வேண்டுகோள்!
சீக்கிரம் இங்கிருந்து
புறப்பட்டு விடுங்கள்!
கடல் வெட்கப்பட்டு
உள்வாங்கிவிடப் போகிறது!
- கி.தளபதிராஜ்
No comments:
Post a Comment