தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து நூல்களையும் வழங்கி வாழ்த்து!
சென்னை, மார்ச். 1- தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (1.3.2023) அவர் காலை சென்னை பெரியார் திடலில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் நினை விடத்திற்கு வருகை தந்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியார் நினைவிடம் நுழைவு வாயில் முன்பு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அன்புடன் வரவேற்று, முதலமைச்சரின் கை பிணைத்து பெரியார் நினை விடத்திற்கு அவரை அழைத்துச் சென்றார். முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியார் நினை விடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்பு, அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களிலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தந்தை பெரியார் நினைவிட நுழைவு வாயிலில் உள்ள திராவிடர் வரலாற்று நினைவுக் கல்வெட்டு அமைந்துள்ள இடத்தின் அருகில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து, பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அறிக் கையை அளித்தும், திராவிட இயக்க நூல்களை அளித்தும், இனிப்பு வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ச்சி தெரிவித்தார். தமிழர் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்.
இந்நிகழ்வில் தமிழர் தலைவருடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலா ளர் சோ.சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியார் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தபோது அவருடன் தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் நாடாளு மன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறப்பினர் ஆ.ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள் முனைவர் க.பொன்முடி, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன், மனோ தங்கராஜ், அன்பில் மகேஷ், சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் எழும்பூர் இ.பரந்தாமன், தாயகம் கவி, தாம்பரம் ராஜா, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் புரசை வாக்கம் ப.ரங்கநாதன், கவிஞர் கவிதைப்பித்தன், எழும்பூர் பகுதி தி.மு.க. செயலாளர் சுதாகர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேனாள் அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக பெரியார் திடலுக்கு வந்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுக்குத் வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment