திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் நடத்தி வைத்தார்
ஊராங்கானி, பிப். 28- கல்லக் குறிச்சி மாவட்டம், சங்க ராபுரம் வட்டம், ஊராங் கானி கிராமத்தில் 26.2.2023 ஞாயிறு காலை 9:30 மணிக்கு மா. ஏழுமலை - அ. ஜெயலட்சுமி ஆகி யோரின் வாழ்க்கை இணையேற்பு விழா சிறப் பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றது.
வாழ்க்கை இணை யேற்பு விழாவிற்கு விழுப் புரம் மண்டல திராவிட கழகத் தலைவர் வழக்கு ரைஞர் கோ.சா.பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ம. சுப் பராயன் வரவேற்புரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் ச.சுந்தரரா ஜன், மாவட்ட அமைப் பாளர் த. பெரியசாமி, மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.கரிகாலன், மாவட்டக் கவுன்சிலர் தெய்வானை துரை, ஊராங்கானி ஊராட்சி மன்ற தலைவர் கோ.சின் னத்தம்பி, திருக்கோவி லூர் ஒன்றிய கழகத் தலை வர் கருப்புச் சட்டை ஆறுமுகம் முதலியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரன் வாழ்க்கை இணை யேற்பு ஒப்பந்த உறுதி மொழியைக் கூறி சுயமரி யாதைத் திருமணத்தை நடத்தி வைத்து சிறப்புரை ஆற்றினார். மணமகன் சங்கராபுரம் ஒன்றிய திரா விட மாணவர் கழக அமைப் பாளராக இருக்கிறார்.
இவ்வூரின் முதல் சுயமரியாதைத் திருமணம்
நான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுயமரியா தைத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளேன். மாவட்ட தலைவர் ம.சுப் பராயன், இவ்ஊரில் நடக்கும் முதல் சுயமரி யாதைத் திருமணத்தை, நீங்கள் தான் நடத்தி வைக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். அந்த வகை யில் சுயமரியாதைத் திரு மணத்தின் மணமகன் மா. ஏழுமலை எம்.எஸ்.சி. இயற்பியல் படித்து, உரத்தநாடு கோட்டத்தில் கேங்மேனாகப் பணிபுரி கிறார். மணமகள் அ.ஜெய லட்சுமி செவிலியர் படிப்பு படித்துள்ளார். புரோகித திருமணத்தை ஒதுக்கி, சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட மணமக்கள் உங்களையெல்லாம் பார்த்து மகிழ்ச்சியாகவும் சிரித்த முகமாகவும் உள் ளதை பார்க்கிறோம். இவர் களுடைய பெற்றோர்கள்
மாரி-உண்ணாமலை யும், அன்பழகன்-மாரியும், உற்றார் உறவினர்களும் இச்சிறப்பான, சிக்கன மான, ஆடம்பரமில்லாத திருமணத்தில் மகிழ்ச்சி யாக இருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது.
ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் துணை
இச்சுயமரியாதைத் திருமணத்தில் மணமக் கள் அ. ஜெயலட்சுமி தன்னுடைய வாழ்க்கைத் இணையாக மணமகன் மா.ஏழுமலையையும் அதேபோல் மணமகன் மா. ஏழுமலை தன்னு டைய வாழ்க்கை இணை யாக மணமகள் அ.ஜெய லட்சுமியையும் ஏற்றுக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டதைப் பார்க்கிறீர்கள். வாழ்வில் ஏற்படும் இன்ப-துன்பங் களில் சமபங்கேற்கும், சம உரிமை படைத்த, உற்ற நண்பர்களாக வாழ் வோம் என்று இருவரும் உறுதிகூறியுள்ளனர். வாழ்வில் ஒருவர் தன் இணையரிடமிருந்து என்னென்ன உரிமை களை எதிர்பார்க்கிறாரோ, அதே உரிமைகளை அவ ரும் எதிர்பார்க்க உரிமை உண்டு என்ற ஒப்பந்தத் தின் பேரில் ஒருவருக் கொருவர் மாலை மாற் றிக்கொண்டு உறுதி மொழி ஏற்றுள்ளனர். இதன்படி இணையர்களி டையே அடிமைத்தனம் இல்லை. மாறாக நண் பர்களாகவும், கருத்தொ ருமித்தும் வேற்றுமை களைந்து மகிழ்வுடன் வாழ இருக்கிறார்கள்.
அளவான குடும்பம்
இவ்விணையர்கள் பெரியார் கூறியது போல், அளவோடு குடும்பத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றோ இரண்டோ பிள்ளை களைப் பெற்றுக் கொண்டு, கல்வியை அவர்களுக்கு அளித்து பகுத்தறிவு உள் ளவர்களாக, சமுதாய சிந்தனை உள்ளவர்களாக வளர்க்க வேண்டும். இது போன்ற சுயமரியாதைத் திருமணங்களை இவ் ஊர் மக்கள் செய்ய முன் வரவேண்டும். ஏனெனில், இத்திருமணத்தில் ஆடம் பரமான வீண் செலவுகள் இல்லை. செலவை சுருக் குவதால் மிச்சப்படும் பணத்தை வங்கியில் சேமித்து வைத்து வருங் காலத்தில் உங்கள் பிள் ளைகளின் கல்விக்கு பயன்படுத்தலாம். அப்போதுதான் நமது குடும்பம் செழிப்பதுடன் மற்றவர்கள் நம்மை பின்பற்றவும் வழி ஏற் படும். மேலும் இது போன்ற திருமணங்களை திராவிடர் கழகத்தாரா கிய எங்களை வைத்துத் தான் செய்ய வேண்டு மென்பதில்லை. உங்கள் குடும்பத்தில் மூத்தோர் ஒருவர் தலைமையில் கூட செய்து கொள்ள லாம். சுயமரியாதைத் திரு மணம் செய்து கொண்ட இம்மணமக்கள் அவர்க ளின் பெற்றோர்களுடன், உறவினர்கள் நண்பர்களு டன் நலமாக வாழ வேண் டும் என வாழ்த்தி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இந்த சுயமரியாதைத் திருமணத்தில் கல்லக் குறிச்சி மாவட்ட பகுத்த றிவாளர் கழகத் தலைவர் பெ.எழிலரசன், மக்களதி காரம் சங்கராபுரம் வட் டப் பொறுப்பாளர் ஆ. ராமலிங்கம், சங்கராபுரம் தமிழ்ச் சங்க செயலாளர் ச.சாதிக் பாட்சா, சங்க ராபுரம் ஒன்றிய கழகத் தலைவர் பெ. பாலசண் முகம், திருக்கோவிலூர் ஒன்றிய கழகச் செயலா ளர் மு. இளங்கோவன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய கழக தலைவர் செல்வ. சக்திவேல், வட லூர் கோடையிடி குண சேகரன்; இடிமுழக்கம் இந்திரஜித் முதலியோர் வாழ்த்துரை வழங்கினார் கள்.
இவ்விணையேற்பு விழாவில் ரிசிவந்தியம் ஒன்றிய கழகத் தலைவர் அர.சண்முகம், வழக்கு ரைஞர் க.நாராயணசாமி, அரசு மேல்நிலைப்பள்ளி சவுந்தரவல்லிபாளையம் பெற்றோர்-ஆசிரியர் கழ கத் தலைவர் அண்ணா அறிவுமணி, மூரார் பாளையம் கிளைக் கழ கத் தலைவர் இரா. செல் வமணி, மணலூர்பேட்டை நகரத் தலைவர் சி. அய்ய னார்; செயலாளர் பா.சக்தி, ஜம்பை கிளைக் கழக செயலாளர் வை.சேகர், முருகம்பாடி கிளைக் கழகத் தலைவர் மா.கண பதி, சங்கராபுரம் நகர செயலாளர் அப்துல் கபூர், வடகரைதாழனூர் கிளைக்கழகத் தலைவர் மு.சேகர், ஆசிரியர்கள் புண்ணியவதனன், மு.இராசமாணிக்கம், தா. கோமதுரை, கமலநாதன், ராதாகிருஷ்ணன், தஞ்சாவுர் சூரக்கோட்டை பிரிவு ஆக்க முகவர்கள் டி.சரவணன்; எம். கணே சன், வணிக ஆய்வாளர் வைத்தியநாதன், வரு வாய் மேற்பார்வையாளர் ஜெ.பாலாஜி, கேங்மேன் நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்கொடை
இறுதியில் மணமகன் மா.ஏழுமலை நன்றிகூற வாழ்க்கை இணையேற்பு விழா இனிதே முடிந்தது. மணமகன் மா.ஏழுமலை “விடுதலை” வளர்ச்சி நிதிக்கு ரூ.500- நன் கொடை வழங்கினார்.
No comments:
Post a Comment