[18-02-2023 'தி இந்து' ஆங்கில நாளிதழ் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்]
அஸ்மி சர்மா, நான்சி பதக் மற்றும் நிகில் தேவ்
இந்திய ஒன்றிய அரசின் 2023-2024 ஆம் ஆண் டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய குடிமக்கள் அனை வருக்கும்; உயர்தரம் வாய்ந்த கவுரவமான ஒரு வாழ்க்கை அளிக்கப்படுவதை 2014 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது என்று உறுதிபடக் கூறினார். ஆனால், இந்தப் பேச்சு உண்மை அல்ல என்றும், வெறும் தற்பெருமைப் பேச்சு என் பதையும் அவரது அறிக்கையின் புள்ளி விவரங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. (மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்) போன்ற பல் வேறுபட்ட சமூகப் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டு, ஏற்கெனவே, பெரும் எண்ணிக்கையிலான குடிமக்கள் தங்கள் வாழ்க் கையைத் தட்டுத் தடுமாறி வாழ்ந்து வரும் நிலையில் இந்த நலத் திட்டங்கள் சீரழிக்கப்பட்டுள்ளன. முதி யோர் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுப வர்கள் போன்ற ஒதுக்கப்பட்ட ஒரு மிகப் பெரிய சமூக மக்கள் அநாதை நிலைக்கு திட்டமிட்டு திருட்டுத் தனமாக தள்ளப்பட்டு உள்ளனர்.
2007 ஆம் ஆண்டு முதல், ஒன்றிய அரசின் திட்டமான தேசிய சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் முதியோருக்கான மாதம் 200 ரூபாய் ஓய்வூதியமும், கைம்பெண்கள் மற்றும் உடல் குறை பாடுள்ளவர் களுக்கு மாதம் 300 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப் பட்டதும் சற்றும் உயர்த்தப்படாமல் அதே அளவில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் மதிப்பிழந்து போன வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த ஓய்வூதியம் வழங் கப்படுகிறது. இந்த பட்டியல் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இதனால், இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு சற்றும் உயர்த்தப்படாமல் அதே 9000 கோடி ரூபாய் நிலையிலே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த 2022-2023 ஆம் ஆண்டு திட்டகால ஆண்டில் 9652.31 கோடியாக இருந்த இதற்கான நிதி ஒதுக்கீடு, 2023-2024ஆம் ஆண்டு திட்டகால ஆண்டில் 9630.32 கோடி ரூபாய்க்கு குறைக்கப் பட்டுள்ளது. "அனைத்து மக்களையும் உள்ளடக் கிய வளர்ச்சி" என்று அழைக்கப்படுவதை கேலி செய்வ தாகவே இது உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில்
ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட 9 நாட்கள் கழித்து, பிப்ரவரி 10 ஆம் தேதியன்று ராஜஸ்தான் மாநில வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கையை அம்மாநில முதலமைச்சர் அகோக் கெலாட் சமர்ப்பித்தார். ஒன்றிய அரசின் திட்டஅறிக்கையில் காணப்படும் முரண்பாடுகள் அனைவருக்கும் ஒரு பாடம் கற்றுத் தருவது போலவே இருக்கின்றன. உரிமை அடிப்படையிலான முன்னேற் றத்திற்கான அணுகுமுறை பற்றிய பா.ஜ.கட்சியின் விமர் சனங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டு, குறைந்த அளவு வருவாய்க்கு உறுதி அளிக்கும் ஓய்வூதிய சட்டம் ஒன்றை வரலாற்று திருப்பமாக முதன் முதலாக அசோக் கெலாட் அறிவித் துள்ளார். நகர்புற, ஊரக வேலை வாய்ப்பு திட்டங்கள் மூலம் ஆண்டுக்கு 125 நாள் வேலை வாய்ப்பை இந்த திட்டம் அளிக்கிறது. அத்துடன் மாதம் குறைந்த அளவு 1000 ரூபாய் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் அளிக்கவும், ஆண்டு தோறும் அது 15 சதவிகித அளவில் தானாகவே உயர்த்தப்படவும் வழிவகை செய்கிறது.
வறுமைக் கோட்டுப் பட்டியலில் உள்ள முதி யோர்களுக்கும், விதவைகளுக்கும், உடல் குறை பாடுள்ள மக்களுக்கும். அவர்கள் பங்குத் தொகை செலுத்தத் தேவையில்லாத இந்த தேசிய சமூக நிதி உதவி ஓய்வூதியத் திட்டம் ஒன்றிய அரசினால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள மூன்று முக்கிய திட்டங்களான, இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதிய திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய உடல் குறைபாடுள்ளவர் களுக்கான ஓய்வூதிய திட்டம்; ஆகியவற்றின் கீழான ஓய்வூதியம் மாற்றமோ உயர்வோ இன்றி கடந்த காலங்களில் அளிக்கப்பட்டது போலவே இப்போதும் அளிக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் ஒட்டு மொத்த செலவினத்;தில் 0.58 சதவிகிதமாக இருந்த இந்த தேசிய சமூக நிதி உதவி ஓய்வூதியத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி 2014-2015 கால 5 ஆண்டு திட்டகாலத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு. 2023-2024 அய்ந்தாண்டு திட்டகாலத்தில் படிப்படியாகக் குறைந்து 0.21 சதவிகித அளவுக்கு வந்து விட்டது. ஒன்றிய அரசின் பங்களிப்பு மட்டுமன்றி, National Social Assistant Programme (NSA) வழி காட்டுதல்படி ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதிக்கு சரி சமமான நிதியை மாநில அரசுகளும் ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசின் பங்களிப்பு பரிதாபப்படத் தக்க அளவில் மிகமிகக் குறைவாக இருந்ததால், 36 மாநில, யூனியன் பிரதேச அரசுகள் (NSAP) வழி காட்டுதலைவிட அதிக பல மடங்கு நிதி ஒதுக்கீடு செய்து வரும் போக்கே நாடெங்கும் நிலவுகிறது.
இப்போது ராஜஸ்தான் மாநிலம் 90 லட்சம் மக்களுக்கும் மேலாக சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இதில் ஒரு மிகச் சிறிய அளவு ஒரு சிறு பகுதி 10 லட்சம் ஓய்வூதியர்களுக்கான நிதியை மட்டுமே (NSAP)ஒதுக்கி வருகிறது. இந்த வரவு செலவு திட்ட அறிவிப்புக்குப் பின் ராஜஸ்தான் மாநி லத்தில் ஓய்வூதியத்தற்கான மொத்த செலவினம் 11,500 கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (NSAP) திட்டத்தின் கீழான ஒட்டு மொத்த தேசிய சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செலவினத்தில் இது ஏறக்குறைய 30 சதவிகித அளவு இருப்பதாகும்.
ஓய்வூதிய உயர்வு மற்றும் பணவீக்கம்
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்ட செலவினத்தை பட்டியலிடத் தவறியதும், பணவீக்கமும், பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் ஒதுக்கப்பட்டு புறக்கணிக் கப்படுவது அதிகரிக்க வழிவகுத்தது. 2007 முதல் 2023 வரையிலான இந்தியாவின் ஆண்டு பணவீக்க அளவு 6.95 சதவிகிதமாக இருந்தது. இதன் பொருள் என்ன வென்றால், செலவினம் பட்டியலிடப்பட்டிருந்தால், 2007 இல் இருந்த இந்த 200 ரூபாயின் பணமதிப்பு 2023 இல் 586.38 ஆக உயர்ந்து இருக்கவேண்டும். 2016 இல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக் கணக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியக்காரர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கும், அமைச்சர்களுக்கும் தங்களது ஒரு நாள் ஓய்வூதியத்தை தருவதாகவும், அந்த ஒரு நாள் ஓய்வூதியமான 7 ரூபாயில் வாழ்வதற்கு முயன்று பார்க்கும்படி கடிதங்கள் எழுதினார்;கள். இந்த 7 ரூபாய் ஓய்வூதியம் மிகமிகக் குறைவானது என்றும், அது ஒரு கொடிய நகைச்சுவை என்றும் ஒன்றிய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ் பகிரங்கமாக விவரித் திருந்தார். ஒரு கோடி ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்களுக்கு ஆண்டுதோறும்; உயரும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவா ரணமாக ஆண்டுதோறும் உத்தேசமாக 12,000 கோடி ரூபாய் செலவழிக்கப் படுகிறது. இத்தொகை சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கான ஒட்டு மொத்த செலவில் உத்தேசமாக 30 சதவிகிதம் அதிகமானதாகும்.
இந்த செலவினம் மட்டும் இல்லாமல், ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கையும் முக்கியமானதாகும். (NSAP) திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அளிக்கப்படும் ஒன்றிய அரசின் உதவித் தொகை, அவற்றின் மக்கள் தொகையில் இருக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் என்ற அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு திட்டத்தின் கீழும் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை புள்ளி விவரங்களையே ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. அத்துடன், 80 சதவிகிதம் மற்றும் அதற்கும் அதிக அளவிலான உடல் குறைபாடு இருப்பவர்;களுக்கு மட் டுமே இந்த உடல்குறைபாடு ஓய்வூதியம் அளிக்கப் படும் என்ற கடுமையான நிபந்தனையும் விதிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு செய்வதால், வறுமைக் கோட் டுக்கும் கீழே இருக்கும் லட்சக்கணக்கான உடல் குறை பாடு கொண்டவர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படாமல் உள்ளனர்.
2013 இல் ராஜஸ்தான் மாநிலத்தில், 55 வயதுக்கு மேற்பட்ட பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மகளிருக்கும், 58 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் இந்த ஓய்வூதியத்திற்கான தகுதி பற்றிய நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு; அவர்களும் அந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். வயது வந்த குழந்தைகள் இருக்கும் விதவைகளும் இந்த விதவைகளுக்கான ஓய்வூதியத்தைப் பெறவும், 40 சதவிகிதத்திற்கு மேலான உடல் குறைபாடு உள்ளவர்கள் ஓய்வூதியம் பெறவும் அனுமதிக்கப்பட்டது. இதன் விளைவாக அம்மாநிலத்தில் உள்ள சமூகப் பாதுகாப்பு ஓய்வூதி யக்காரர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தில் இருந்து 58 லட்சமாக உயர்ந்துள்ளது. இன்று இந்த எண்ணிக்கை 90 லட்சத்தையும் கடந்துவிட்டது. இவர்கள் அனை வரும் இயற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள இந்த சட்டத்தின் கீழ் வருவார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தைப் பின்பற்றி மற்ற மாநி லங்களும் இந்திய ஒன்றிய அரசும் கூட, தற்போது அங்குள்ள ஓய்வூதியத் திட்டங்களில் கூடுதலான பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது, தங்களது பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றுவது மற்றும் இதர மக்கள் நல சட்டங்களைப் போலவே அதே சட்டப்படியான பாதுகாப்பு அளிப்பது போன்ற செயல்களில் தக்க மாற்றங்களை மேற்கொள்ள தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்திக்கு ஒரு கணிசமான பங்களிப்பை தங்களின் வாழ்நாள் முழுவதும் அளிக்கும், அமைப்பு சாரா துறைப் பணி யாளர்கள் தாங்கள் செய்யும் பணிக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு என்பதை ஒன்றிய அரசு கட்டாயமாக அங்கீகரித்து செயல்படவேண்டும். பல மக்கள் இயக்கங்களும் பிரச்சாரங்களும், அவ்வப்போது ஏற்படும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வின் காரணமாக அவ்வப்போது உயர்த்தப்படும் குறைந்த அளவு ஊதியத்தில் 50 சதவிகிதம், தொழிலாளர்கள் பங்குத் தொகை செலுத்தாத பரவலான ஓய்வூதிய திட்டத்த்ஜீல் குறைந்த அளவு மாத ஓய்வூதியம் கட்டாயமாக வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றன.
இந்த உரிமையின் அடிப்படையிலான அணுகு முறை தர்மத்தின் அடிப்படையிலானது அல்ல. தொழிலாளர்கள் தங்களின் ஓய்வு பெற்ற வாழ்க்கையை கவுரவத்துடன் வாழ்வதற்கான குறைந்த அளவு சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படுவதற்கான உரிமையை அங்கீகரிப்பதன் அடிப்படையிலானது ஆகும்.
இந்த இரண்டு - ஆண்டு வரவு செலவு நிதி நிலை அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று கோட்பாட்டு முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. இதனால் அசோக் கெலாட்டின் அரசுக்கு தேர்தல் ஆதாயம் கிடைக்குமா அல்லது சமூக ரீதியிலான பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததற்காக நரேந்திர மோடி தேர்தலில் அதற்கான விலையைக் கொடுப்பாரா என்பது மக்கள் நல திட்டக் கொள்கைகளைத் தாண்டிய பல உண்மைகளைப் பொறுத்து இருக்கிறது.
எவ்வாறு இருந்தாலும், பாதிக்கப்பட்ட தொழி லாளர்கள், மூத்த குடிமக்கள், உடல் குறைபாடு உள் ளவர்கள் ஆகியவர்களுக்கு உரிமையின் அடிப் படையில் அவர்களது கவுரவமான வாழ்க்கைக்கு தேவையான பயன்கள் அளிக்கப்படுவதை, உட னடியான தேர்தல் ஆதாயத்தைப் பற்றி கருத்தில் கொள்ளாமல், தங்களது நோக்கமாக எந்த ஒரு ஜனநாயக நாடும் கொண்டிருக்கவேண்டும். இறுதியில் மிகவும் ஒதுக்கப்பட்ட நமது மக்களின் அடிப்படைத் தேவைகளை அளிக்கும் நமது கருணையும், நமது கடமையுணர்வும்தான் நம்மை ஒரு சமூகமாக, ஒரு நாடாக அங்கீகரிக்கச் செய்வதாகும்.
நன்றி: 'தி இந்து' 18-02-2023
தமிழில் : த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment