புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 28, 2023

புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்!

சென்னை, பிப். 28- உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, சென்னை பள்ளிக்கரணை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை, 26.2.2023 அன்று மாரத்தான் ஓட்டத்தை நடத்தியது. பள்ளிக்கரணை காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆர் ஆல்பின் ராஜ் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனைகளின் குழுமத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் டாக்டர் டி.ஜி.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். 

டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் டி.ஜி. சிவரஞ்சனி கூறுகையில், "புற்றுநோய் சிகிச்சை மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே பரப்புவதே இந்த நிகழ்ச்சியின் குறிக்கோளாகும் என்றார். பல மூத்த மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பலர் என 450 பேர் மாரத்தானில் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment