புதுடில்லி, பிப்.28- விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை குறி வைக்கும் பா.ஜ.க.வின் தேசியக் கொள்கையின் ஒரு பகுதியே மணிஷ் சிசோடியாவின் கைது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் குற்றம் சாட்டினார்.
டில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவிடம் ஒன்றிய புலனாய்வுத் துறை (சி.பி.அய்.) சுமார் 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தியது. பின்னர் அவரை அதிரடியாக கைது செய் தது. சிசோடியாவின் பதில்களில் திருப்தி இல்லை மற்றும் கேள் விகளுக்கு விளக்கங்களை தவிர்த் தது போன்ற காரணங்களால் அவரை கைது செய்ய வழிவகுத்தது என்று சி.பி.அய். தெரிவித்தது
இந்நிலையில், மணிஷ் சிசோ டியா கைது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வரும், அந்த கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினருமான பிருந்தா காரத் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை நாங்கள் வன் மையாக கண்டிக்கிறோம். பா.ஜ.க. வால் வாக்குகளின் அடிப்படையில் அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாது என்றால், எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைக்க அல்லது எதிர்க்கட்சி அரசாங்கம் இயங்கும் இடத்தை குறிவைக்க சி.பி.அய், அமலாக்கத்துறை மற்றும் வரு மான வரித்துறை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார் ஏனென்றால் அது பா.ஜ.க.வின் தேசியக் கொள்கை, உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என் றால், எதிர்க்கட்சி தலைவர்களை யும், எதிர்க்கட்சி தலைமையின் கீழ் இயங்கும் அரசுகளையும் குறி வைத்து தாக்குகிறீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்
மணிஷ் சிசோடியா கைது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி யின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், பெரும்பாலான சி.பி.அய். அதி காரிகள் மணிஷ் சிசோடியா கைதுக்கு எதிராக இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அனைவரும் அவர் (மணிஷ் சிசோடியா) மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அவருக்கு எதிராக எந்த ஆதராமும் இல்லை. ஆனால் அவரை கைது செய்வதற்கான அரசியல் அழுத்தம் மிக அதிகமாக இருந்ததால் அவர்கள் (சி.பி.அய். அதிகாரிகள்) அரசியல் எஜமானர்களுக்கு கீழ் படிய வேண்டியிருந்தது என பதிவு செய்து இருந்தார்
No comments:
Post a Comment