தாய்மொழியைப் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடனாகும். நம் தமிழ் மொழி தாய் மொழி என்ற மட்டிலும் அல்லாமல் எல்லா வளப்பங்களும் கொண்ட சிறந்த மொழி. இந்தியாவிலேயே பழைமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும். அப்படிப் பெருமைக்குரிய மொழிக்கு ஏற்பட்ட ஆபத்துகளை எதிர்த்தும், அது மேன்மை அடைய வேண்டும் என்றும் அதற்காகப் போராட்டங்கள் நடத்துகின்றோம்.
- ‘விடுதலை’, 20.6.1959
அந்தந்த நாட்டில் அந்தந்த மொழியே போதனா மொழியாக இருக்க வேண்டும். அந்தந்த நாட்டு மொழியிலேயே சர்க்கார் நடக்க வேண்டும். அந்தந்த நாட்டுக் கலையே பொது அறிவுக்கு உணவாக இருக்க வேண்டும்.
- ‘குடிஅரசு’, 2.5.1948
தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்து விட்டது இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளி நாட்டு மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி, கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?
- ‘விடுதலை’.5.1.1968
No comments:
Post a Comment