பள்ளி மாணவர்கள் உருவாக்கும் 150 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்படும்
சென்னை, பிப். 16- மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்பு ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் தொழில் நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வற்காக பல்வேறு செயல்பாடுகளை முன்னெ டுத்து வருகின்றன. அந்தவகையில் மாணவர் களின் பங்களிப்பில் தயாரிக்கப்பட்ட 150 சிறிய செயற்கைக் கோள்கள் சவுண்டிங் ராக்கெட் மூலம் பிப்.19ஆம் தேதி ஏவப்பட உள்ளது. இதற்கு டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் செயற்கைக் கோள் ஏவுதல் திட்டம்-2023 என பெயரிடப்பட்டுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. அப்போது ஸ்பேஸ் ஜோன் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஆனந்த் மேகலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதா வது: நாடு முழுவதும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 5,000 மாணவர்கள் மூலம் 150 சிறியரக செயற்கைக் கோள்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. இந்த செயற்கைக் கோள்கள் சவுண்டிங் ராக்கெட் மூலம் பிப். 19ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிப்புலம் என்ற இடத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இதில் தமிழ் நாட்டில் இருந்து 2,000 மாணவர்கள் பங்கேற் கின்றனர். இந்த செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் சவுண்டிங் ராக்கெட்டையும் எங்கள் குழுவினரே தயாரித்துள்ளோம். 3 மீட்டர் உயரம் கொண்ட அந்த ராக்கெட்டின் எடை 65 கிலோவாகும். சுமார் ரூ.2.5 கோடி மதிப்பில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தரையில் இருந்து 5 முதல் 6 கி.மீ. தூரத்துக்கு வானில் பாய்ந்து செல்லும் இந்த ராக்கெட்டுக்குள் இருக்கும் செயற்கைக் கோள்கள் மூலம் காற்றின் தரம், ஓசோன் படலத்தின் தன்மை, வெப்பநிலை, காற்றின் அழுத்தம், கார்பன் அளவு உட்பட பல்வேறு தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு பயன் படுத்தப்பட உள்ளன என்று கூறினார்.
No comments:
Post a Comment