வாக்குகள்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் வாக்குப் பதிவு நேற்று (27.2.2023) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி தொகுதியில் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தகவல்.
உத்தரவு
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மனநோய், தூக்க மற்றும் மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
காலை உணவு
தமிழ்நாட்டில் உள்ள 433 பள்ளிகளில், நாளை (1.3.2023) முதலமைச்சரின் “காலை உணவுத் திட்டம்” விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
அமைதியான...
இந்தியாவில் முதல்முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், நேற்று முதல் ஒலிபெருக்கி சத்தமில்லாத அமைதியான ரயில் நிலையமாக மாறியுள்ளது.
காணொலி மூலம்
மார்ச் 3ஆம் தேதி முதல் அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கள் விசாரணை காணொலி (வீடியோ கான்பரன்ஸ்) முறையில் நடைபெறும் என உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பி.தனபால் அறிவிப்பு.
பேருந்து நிலையங்கள்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரூ.302.50 கோடியில் 24 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.
பயிற்றுநர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தின் பயிற்றுநர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் உடற்தகுதி திறன் தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி நடைபெற உள்ளன.
அனுமதி
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று பெங்களூரு பொம்மசந்திரா - ஒசூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்க அனுமதி வழங்கியுள்ளதுடன் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளவும் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment