சங்கிகளின் சில்லரைத்தனத்தை முறியடித்தது சேத்தூர் தமிழர் தலைவரின் பரப்புரை பயணம் மிகப் பெரிய வெற்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 28, 2023

சங்கிகளின் சில்லரைத்தனத்தை முறியடித்தது சேத்தூர் தமிழர் தலைவரின் பரப்புரை பயணம் மிகப் பெரிய வெற்றி!

மதிமுக நகர செயலாளரின் முகநூல் பதிவு

கடந்த 25.2.2023 அன்று இரவு விருது நகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சேத்தூரில் சமூகநீதி  விழிப்பு ணர்வு கூட்டம் நடைபெற்றது.

அரைகுறை சங்கிகளின் சில்லரைத் தனமான புலம்பலை எல்லாம் கழகத்தின ரும், காவல்துறையினரும் ஊதித் தள்ளி னர்.

வழக்கமாக நடைபெறும் கூட்டத் தைக் காட்டிலும் பொதுமக்கள் உணர்ச்சி யோடு திரண்டதால் நெருக்கடியான கூட்டமாக நடத்தும் சூழலை சங்கிகள் உருவாக்கினர்.

இதில் கேவலம் என்னவென்றால் அதிமுகவினர் சிலரும் சேர்ந்து கொண் டதாக அறிந்தபோது மனம் வேதனை யடைந்தேன்.

இரவு 8.30 மணிக்கு வந்த மானமிகு ஆசிரியர் அவர்கள் தனது பேச்சை ஆரம்பிக்கும்போதே "கருப்புச் சட்டைக் காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்" எனக் கூறி ஒருமணி நேரம் கூட்டத்தை வசப்படுத்திய நிலையில் ஆசிரியர் அவர்களுக்கு இராசபாளையம் நகர மறுமலர்ச்சி திமுக சார் பில் பொன்னாடை கொடுத்து வரவேற் றோம். 

இதில் ஒரு விசித்திரம் என்னவென் றால் பெண் காவலர்கள் அதிகமானோர் தந்தை பெரியார் புத்தகங்களை வாங்கிக் கொண்டு சென்றது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இந்தப் பொதுக்கூட்டத்தை எனது மதிப்பிற்குரிய சகோதரர் "திராவிட" திருப்பதி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு திராவிடர் கழகத்தின் தோழர்கள் துணை நின்றனர்.

ஆசிரியரின் பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றதோடு, கூட்டத்தின் நோக்கமும் பொது மக்களி டத்தில் சென்று சேர்ந்து விட்டது.

அயராது உழைத்த அண்ணன் "திராவிட" திருப்பதிக்கு வாழ்த்துகள்!

இந்த நிகழ்வில் முன்னிலை வகித்த  மறுமலர்ச்சி திமுகவின் இராசபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ப.வேல்முரு கன், எம்எல்எப் மாநில துணைப் பொதுச் செயலாளர் காதர்மைதீன், சேத்தூர் பேரூர் செயலாளர் அய்யணப்பன், இராச பாளையம் நகரத் துணைச்செயலாளர் அக்பர்அலி, மேனாள் பேரூர் செய லாளர் ஜெயசங்கர், மேனாள் ஒன்றியச் செயலாளர் தங்கப்பன், மாவட்ட இலக்கிய அணி வேம்பு, தொண்டர்படை தர்மலிங்கம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்புசெய்தனர். 

இவ்வாறு இராசபாளையம் மறு மலர்ச்சி திமுக, நகரச்செயலாளர், அ.மதி யழகன் எம்.ஏ., தன்னுடைய முகநூலில் பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment