பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார்.
சென்னை, பிப்.28- தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக் கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்த நாளான நாளை (1.3.2023) காலை 7:00 மணிக்கு அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களிலும், காலை 7:15 மணிக்கு சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
காலை 8:30 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துப் பெறுகிறார். மாலை 5:00 மணிக்கு சென்னை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் - அகில இந்தியத் தலைவர்கள் கலந்துகொள்ளும் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஏற்புரையாற்றுகிறார் என தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment