சென்னை, பிப்.18 மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ரூ.50 கோடி செலவில் தமிழ்நாட்டில் 25 நகரங்களில் புதிதாக காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மக்கள்தொகை பெருக்கம், அதன் விளைவாக வாகன பெருக்கம், கட்டுமானப் பணிகள் அதிகரிப்பு, பசுமை பரப்பு குறைதல் போன்ற காரணங்களால் நகர்ப்புறங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இது மெல்ல மக்களின் ஆயுளை குறைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தமிழ்நாட்டில் மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரங்களில் தற் போது 34 காற்று தர கண்காணிப்பு நிலையங்களை அமைத்து கண்காணித்து வருகிறது. இது 24 மணி நேரமும் செயல்பட்டு, உட னுக்குடன் தரவுகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வருகின்றன. நிகழ்நேர மாசு நிலவரத்தை பொதுமக்கள் பார்க்கும் வசதிகளையும் மாசுக்கட்டுபாட்டு வாரியம் கொண்டு வந்துள்ளது.தற்போது புதிய மாவட்டங் களையும், மாநக ராட்சிகளையும் அரசு உருவாக்கியுள்ளது. இப்பகுதி களிலும், விடுபட்ட மாவட்ட தலைநகரங்களிலும் காற்றின் தரத்தை கண்காணிக்க ரூ.50 கோடியில் 25 நகரங்களில் 24 மணி நேரமும் இயங்கும் நவீன காற்றுத் தர கண்காணிப்பு நிலையங் களை அமைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. அந்த நிலை யங்கள் புதிய மாநகராட்சிகளான காஞ்சிபுரம், ஆவடி,தாம்பரம், கும்பகோணம், விடுபட்ட மாவட்ட தலை நகரங்களான தருமபுரி, நாகர்கோவில், பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருவாரூர் திருவண் ணாமலை, விழுப்புரம், ஈரோடு, திருவள் ளூர், கிருஷ்ணகிரி, புதிய மாவட்ட தலை நகரங்களான கள்ளக்குறிச்சி, மயிலாடு துறை, தென்காசி, திருப்பத்தூர், செங்கல் பட்டு மேலும் பல்லாவரம், காரைக்குடி, ராஜ பாளையம், ஆம்பூர், நெய்வேலி ஆகிய 25 நகரங்களில் அமைக்கப்பட உள்ளன. இவற்றின் நிகழ் நேர தகவுகளை யும் பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வசதிகளையும் ஏற்படுத்த இருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment