நாகர்கோவில், பிப்.27- நாகர்கோவிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 6ஆம் தேதி செல்கிறார். தோள் சீலை போராட்ட 200 ஆவது ஆண்டு நினைவு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
ஏற்றத்தாழ்வு மற்றும் அடக்கு முறைக்கு எதிரான சமூக நீதி போராட்டம் கடந்த 1822ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தொடங்கியது. அதன்பிறகு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட் டத்தில் பங்கேற்ற வீரர்களை போற்றுகிற வகையிலும், அவர் களது பெருமைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் தோள் சீலை போராட்ட மாநாடு வருகிற 6ஆம் தேதி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடக்கிறது. இந்த மாநாட் டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.
மேலும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல் போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில்
இரா.முத்தரசன் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கி றார்கள். அதைத் தொடர்ந்து மறுநாள் 7ஆம் தேதி காலை மாநகராட்சி கட்ட டத்தையும், ஒழுகினசேரியில் அமைந்துள்ள கட்சி அலு வலகத்தில் முத்தமி ழறிஞர் கலைஞர் சிலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
No comments:
Post a Comment