திருச்சி, ஜன. 31- தேசிய அளவிலான கலைநிகழ்ச்சிப் போட்டி சங்ககிரி, விவேகானந்தா கல்லூரியில் 30.12.2022 அன்று நடைபெற்றது. அதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் இளநிலை மருந்தியல் மாணவிகள் எம். தேவி வசந்தா, கரு. சூர்யபிரபா, ந. பிரிய தர்சினி, ச. சண்முக பிரியா, ஜே.சிந்து, நெ. அக்சயா மற்றும் முதலா மாண்டு மாணவி எம். லேகா சிறீ ஆகியோர் தனி நபர் நடனம் மற்றும் குழு நடனப் போட்டியில் பங்கு கொண்டனர். 25ற்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கு கொண்ட இப்போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி இரண்டாமிடம் பிடித்து ரூபாய் 1,500 பரிசுத் தொகையினையும், பாராட்டு சான்றிதழையும் பெற்றது. இத்தகைய சிறப்பினை கல்லூரிக்கு பெற்றுத் தந்த மாணவிகளை கல்லூரியின் நிர் வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள் பாராட்டி வாழ்த்துக் களை தெரிவித்துக் கொண்டனர்.
Tuesday, January 31, 2023
தேசிய அளவிலான கலை நிகழ்ச்சிகளில் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு பரிசு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment