ஈரோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக காங்கிரசு கட்சி சார்பில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று (23.1.2023) சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவரும் திமுக தலைவருமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணி சார்பில் காங்கிரசுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Monday, January 23, 2023
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment