அன்புடையீர்! வணக்கம்.
இன்பம் பயக்கும் இயற்கை வளமெலாம்
விஞ்சித் தோன்ற எய்திடும் தையில்
பல்சுவை பல்கி பாலுடன் பொங்க
பொங்குக வாழ்க்கை! பொங்குக செல்வம்!!
அடிமை யொழிய ஆண்மை பொங்குக!
கற்பனைக் கடவுளுங் கெடுசூழ் சமயமும்
அடியோ டழிய அறிவு பொங்குக!
நன்னிலப் பற்றுந் தாய்மொழிப் பற்றும்
தன்னுணர் வோடு தழைக்கப் பெற்று
வாழிய நெடிது வளம்பல மல்கியே!
- கி.வீரமணி, செல்வம் நிலையம், கடலூர் முதுநகர்
குறிப்பு: 1952இல் தோழர்களுக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்து! உதவி நெல்லிக்குப்பம் மு.சுப்பிரமணியம்
No comments:
Post a Comment