திராவிடப் பேரொளி
தீச்சுடர் ஏந்தி
திக்கெட்டும் பெரியார்
கொள்கை பரப்பிடும்
வீரமணி!
கூரிய வாளினை
மீறிய வீரிய
பேச்சினை மேடையில்
முழங்கிடும் எங்கள்
கொள்கை மணி!
பார்ப்பன நச்சுப்
பாம்பினை பெரியார்
தடி கொண்டடித்துத்
துரத்திடும் எங்கள்
தூய மணி!
கெடுதலை அகற்ற
விடுதலை இதழை
தோளில் சுமந்து
வீறு நடைபோடும்
வீர மணி!
மாணவராக கழகத்தில்
இணைந்து நான்கு
தலைமுறை மாணவர்க்கும்
பாடம் புகட்டும்
தலைவர் மணி!
'நீட்'டெனும் கேட்டினை
ஓட்டிட நாடெங்கும்
ஈட்டியாய் பரப்புரை செய்த
செயல் மணி!
ஹிந்தித் திணிப்பு
என்றும் எதிர்ப்பு!
இட ஒதுக்கீடு காப்பது
இவரின் இயல்பு!
இவரே எங்கள்
அன்பு மணி!
இலங்கைத் தமிழர்
இன்னலைப் போக்க
தனி ஈழம் ஒன்றே
தீர்வென்பார்!
வேழம் போல
முழங்கிடுவார்.
ஒழுக்கம் இவரின்¢
இருப்பிடம்
பண்பு இவரின்
பிறப்பிடம்
தலைமைப் பண்பில்
இவரே சிறப்பிடம்
கற்க - நிற்க
கற்றுக் கொடுக்க -
தர்க்க வாதத்தில்
தகுந்த பதிலடி
தரு மணி!
சட்டம் இவரிடம்
வட்டமிடும்
சரத்துக்கள் யாவும்
சங்கமமாகும்
இவரே சட்டமணி!
பட்டம் பலப்பல பெற்றாலும்
விருதுகள் பலப்பல
தந்தாலும், இவருக்குப்
பிடித்த விருது
மானமிகு என்பதுவே!
கழகப் பணியோ
வைர மணி!
'விடுதலை'ப் பணியோ
பொன் மணி!
எங்கள் மூத்தவர்
வயதோ வெள்ளிமணி!
ஆரியம் கூறிடும்
வேதங்கள் பேதங்கள்
அறவே அழிக்கக்
காரியம் ஆற்றும்
ஆற்றல் மணி!
நீதிமன்றத் தீர்ப்பை
நிர்ணயிப்பார்!
வீதி மன்ற
விதியை வகுத்திடுவார்
சட்டம் மீறா நீதி மணி!
கோடான கோடி
தமிழருக்குத் தலைவர்
ஈடாக இவருக்கு
இல்லை என்றே
இயங்கும் மணி!
அகவை நூறு
தாண்டிய பிறகும்
ஆற்றும் பணி
மாறாது என்றே
உழைக்கும் மணி!
வலிமை வாய்ந்த
சிங்கம் இவர்
கருப்புடை அணிந்த
வேழம் இவர்!
தலை தாழா கருப்பு மணி!
நூறைத்தாண்டி
நுழைந்திடுவார்
ஆயிரம் தாண்டியும்
வாழ்ந்திடுவார்
அப்போதும் தேவை
வீரமணி!
கழகக் குடும்பத்
தலைவனே
வாழ வேண்டிய
வீரம் நீ!
வாழ்க! வாழ்க
வாழ்க நீ!
வாழ்வாங்கு
வாழ்க நீ!
- அ.வெ.முரளி,
காஞ்சி மாவட்ட கழக
இணைச் செயலாளர்,
காஞ்சிபுரம்
No comments:
Post a Comment