பள்ளிக்கல்வித் துறை (டி.பி.அய்.) வளாகத்துக்கு இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் பெயர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 1, 2022

பள்ளிக்கல்வித் துறை (டி.பி.அய்.) வளாகத்துக்கு இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் பெயர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,டிச.1- பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டி.பி.அய்.வளாகத் தில் பேராசிரியர் க.அன்பழகனார் அவர்களின் உருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன்  கல்வி வளாகம்’’ என்றும் அழைக்கப்படும் - சிறந்த பள்ளிகளுக்கு  பேராசிரியர்  பெயரில் விருதும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த விவரம் வருமாறு,

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின்  நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூபாய் 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் க.அன்பழகனாரின்  பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை அய்ந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு, நடப்பு  ஆண்டிற்கு சுமார் ரூபாய் 1400 கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டி ருந்தது. அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து  முதலமைச்சர் அவர்கள் நடப்பு ஆண்டிலேயே பல்வேறு கட்டுமானத்திற்கும் மராமத் துப் பணிகளுக்கும் கூடுதலாக சுமார் 1400 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந் தார்கள்.

இத்துடன், பேராசிரியர் க.அன்பழகன் அவர்களது நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டி.பி.அய்.வளாகத்தில் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் உருவச்சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’’ என்றும் அழைக்கப்படும். 

மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக  வளர்ச் சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளி களுக்குப்  பேராசிரியர்  க. அன்பழகனார் பெயரில் விருதும் வழங்கப்படும்.

-இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment