சுயமரியாதைச் சுடரொளி ”கோரா”வின் ஓவியத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆற்றிய வீரவணக்க உரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 1, 2022

சுயமரியாதைச் சுடரொளி ”கோரா”வின் ஓவியத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆற்றிய வீரவணக்க உரை!

 மூன்று தலைமுறைகளாக கொள்கைக் குடும்பம்- தோழர் ‘கோரா'வின் குடும்பம்! 

இந்த உறவு ஆழமானது -தெளிவானது - உறுதியானது! 

ஆவடி, டிச.1 சுயமரியாதைச் சுடரொளி கோராவின், படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி உரை யாற்றினார். இதில் ஈழத் தந்தை செல்வாவின் மகன் மதிப்பிற்குரிய சந்திரகாசன் தோழர்கள் சிலரோடும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கடந்த நவம்பர் 7ஆம் தேதி அதிகாலையில் பெரியார் பெருந்தொண்டர் கோரா உடல் நலிவுற்று காலமானார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அன் னாரது திருவூர் ராம்நகர் இல்லம் சென்று இறுதி வணக் கம் செலுத்தி, ஆவடி மாவட்டத் தலைவர் பா. தென் னரசு தலைமையில் அன்றே நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் உரையாற்றியதோடு, திருமுல்லைவாயல் மின் தகன மேடை வரை சென்று கடைசிவரை இருந்து சுயமரியாதைச் சுடரொளியாகிவிட்ட கோராவுக்கு மரி யாதை செய்தார். அதைத் தொடர்ந்து, அவரது படத் திறப்பு, நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொள்ள ஒப்புதல் அளித்த நிலையில், ஆவடி மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை திருவூர் ராம்நகர், கோராவின் இல்லத்தில்  27.11.2022 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு, சுயமரியாதைச் சுடரொளி கோராவின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி, தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

குமணன் சாவடியில் சிறப்பான வரவேற்பு!

நிகழ்ச்சிக்கு வருகிற வழியில் குமணன் சாவடியில் பெரியார் பற்றாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், தி.மு.க. ஆதிதிராவிடர் அணியின் பொறுப்பாளர் கலாநிதி, மாங் காடு தி.மு.க. பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப் பாளர் எ.மனோகரன், பூவை, மதுரவாயல் பகுதித் தலைவர் க. தமிழ்ச்செல்வன், பூவை நகரத்தலைவர் பெரியார் மாணாக்கன், கழகப் பொதுக்குழு உறுப் பினர்கள் பூவை மு. செல்வி, தி. மணிமாறன், கலைமணி, பகுத்தறிவு -  சந்திரபாபு இணையர்கள், மாணவர் கழக மாநில பொறுப்பாளர் செ.பெ.தொண்டறம், குன்றத்தூர் திருமலை, கரைமாநகர் சுரேஷ், மதுரவாயல் அண்ணா நிசார், பெரியார் பிஞ்சுகள் ரிஸ்வானா, ரியான், 

சு. அமுதன், த. இனியன், ஆவடி நகரக் கழகச் செயலாளர் தமிழ்மணி இளைஞர் அணித் தோழர் பூவை வெங்க டேசன், அனகை ஆறுமுகம், பாலச்சந்திரன், சோமங் கலம் இளமாறன் (பாலமுரளி),ஆகியோர் தமிழர் தலை வருக்கு உற்சாகமான வரவேற்பளித்துச் சிறப்பித்தனர். தோழர்களிடம் விடைபெற்று ஆசிரியர் அவர்கள் புறப்பட்டார்.

அழைப்பிதழில் குறிப்பிட்ட நேரத்திற்கு தமிழர் தலைவர் கோரா இல்லம் வந்தடைந்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ஆவடி மாவட்டச் செயலாளர் க. இளவரசன், தாம்பரம் மாவட் டத் தலைவர் ப.முத்தையன், சோழிங்கநல்லூர் மாவட் டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் ஆகியோர் பயனாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, திருவூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கிரி, திருவூர் கவுன்சிலர் திலீப் ராஜ் ஆகியோர் பயனாடை அணிவித்து மரியாதை செய்தனர். கோரா குடும்பத்தினர் சார்பில் புவன்பாபு தமிழர் தலைவருக்கும், சந்திரகாசனுக்கும் ஆடை அணிவித்து மரியாதை செய்தார். அத்தோடு தமிழர் தலைவரின் 90 ஆம் அகவைக்கு முன்கூட்டியே வாழ்த் துக் கூறி, குடும்பத்தினர் சார்பில் தந்தை கோராவின் வழியில் ரூ. 5,000 நன்கொடை வழங்கி மகிழ்ந்தார்.

நினைவேந்தல் நிகழ்வில் திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைப்பு செய்ய, நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வெங்கடேசன், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், இளை ஞரணி தலைவர் வெ. கார்வேந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் பூவை செல்வி, மணிமாறன், துணைத் தலைவர்கள் வேல்முருகன், கண்ணன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன், துணைச் செயலாளர் கார்த்திகேயன், திருநின்றவூர் பகுதித் தலைவர் ரகுபதி, மகளிரணித் தோழர் ராணி ரகுபதி, ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

அனைவரின் கவனத்தையும் கவர்ந்த கோரா ஓவியம்!

கோராவின் நண்பர் குடும்பத்தைச் சேர்ந்த தோழர் மகேஸ்வரி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அதைத்தொடர்ந்து கோராவின் படத்தை திறந்துவைக்க ஆசிரியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குடும்பத்தினர் சூழ, ஆசிரியர் படத்தை திறந்து வைத்தார். கோராவின் ஒளிப்படத்தை எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் ஒரு இனிய அதிர்ச்சி. ஆசிரியர் திறந்து வைத்தது ஒரு அருமையான ஓவியம்! அதிலும் அந்த ஓவியத்தில் கோரா கையில் விடுதலை வைத்துக்கொண்டிருந்தார். இன்னும் ஒரு சிறப்பு, சட்டஎரிப்புநாளை நினைவு கூரக்கூடிய செய்திகள் அதில் இடம் பெற்றிருந்தது. இதை ஒருங்கிணைப்பு செய்துகொண்டிருந்த பிரின்சு என்னாரெசு பெரியார், ஓவியத்தின் சிறப்பாக இதைக் குறிப்பிட்டதோடு, இதை வரைந்தவர் கோராவின் மகன் புவன்பாபு என்பதையும் குறிப்பிட்டபோது அனைவரும் வியப்படைந்தனர். ஓவியத்தைக் கண்டவுடன் அனை வரும் உணர்வு வயப்பட்டனர். அதே உணர்வோடு ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோராவின் இணையர் ஹேமமாலினி கண்கலங்கினார். ஆசிரியர் உட்பட மேடையில் இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். 

பெரியாரால் விடுதலை பெற்றார் கோரா!

தொடர்ந்து, கோராவின் மகன் புவன் பாபு, திராவிட மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதி வதனி, ஆவடி நகரத் தலைவர் கோ.முருகன், ஆவடி மாவட்ட செயலாளர் க. இளவரசன், சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் ஆர். டி. வீரபத்திரன், ஈழத் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் ஆகியோர் நினை வேந்தல் உரை ஆற்றினர். பெருமதிப்பிற்குரிய சந்திர காசன் அவர்கள் உரையாற்றிய போது, கோரவுடனான தனது முதல் சந்திப்பு குறித்தும், அவருடனான அடுத்தடுத்த தொடர்பு களையும் நினைவுகூர்ந்து பேசினார். மேலும் அவர், தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளால் பிற்போக் குத்தனமான சமூக கட்டுகளில் இருந்து கோரா விடுதலை பெற்றது மட்டுமின்றி, தனது குடும்பத்தினரையும், மற்ற வர்களையும் விடுதலை பெற வைத்ததாகவும் குறிப் பிட்டு, தந்தை பெரியாரின் தொண்டை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

கடவுள் இல்லைன்னு சொல்ற கட்சியில் இருக்கிறவர்தானே?

இறுதியாக தமிழர் தலைவர் நினைவேந்தல் உரை யாற்றினார். தொடக்கத்தில் ஒரு பெரியார் தொண்டனுக் கும் மற்ற கட்சியில் இருப்பவர்களுக்கான ஒரு நுட்பமான வேறுபாட்டை சுட்டிக்காட்டி பேசினார். மற்ற கட்சியி னரை வசவுச் சொல்லில் சொல்லும் போது எதையோ சொல்லுவார்கள். ஆனால் தி.க. வினரை வசைபாடும் போதுகூட கொள்கையை சொல்லியே வசை பாடு வார்கள் என்று சொல்லி, "கடவுள் இல்லைன்னு சொல்ற கட்சியில் இருக்கிறவர்தானே?" என்று அந்த வசவுச் சொல்லையும் சொல்லிக் காட்டினார். அப்படித்தான் கோரா வாழ்ந்திருக்கிறார் என்றதோடு, அதற்காக தாங் கள் கோபம் கொள்வதில்லை என்றும், பெருமைப்படு வதாகவும் குறிப்பிட்டார்.

கடவுள்களின் தந்தை ஓவியர்கள் தான்!

முன்னதாக புவன் பாபு தனது நினைவேந்தல் உரையில், தான் ஓர் ஓவியர் என்பதையும், அதை தனது தந்தை கோராவிடம் குறிப்பிட்டபோது, ‘ஓவியர்களை பெரியார் அயோக்கியர்கள்’ என்று சொன்னதை நினைவு கூர்ந்து, ”ஏன் தந்தை பெரியார் அப்படி சொன் னார்? என்பதற்காக, ’பிறப்பும் இறப்பும் இல்லாத கடவுள் களுக்கு உருவத்தை கொடுத்தது ஓவியர்கள் தான்! 6 தலை 12 கைகள் என்றெல்லாம் வரைந்து  அவர்கள் தான் கடவுள் உருவங்களை மக்களுக்கு அறிமுகம் செய்தவர்கள். அதனால் கடவுள்களுக்கு தந்தை ஓவியர்கள் தான்’ என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டு, இதில் கடவுள் இல்லை என்ற கருத்தும் இழையோடும்படி, எடுத்துக்காட்டி, “அதனால்தான் பெரியார் ஓவியர்களை அப்படிச் சொன்னார்!” என்று விளக்கினார். பார்வை யாளர்களுக்கு கடவுள் இல்லை என்கிற அரிய உண் மையும், அதனூடேயே கண்ணியமான நகைச்சுவையும் ஒரே நேரத்தில் கிடைத்தது. புவன் பேசியதில், பெரியா ருக்கு பிடித்த திருக்குறளாக தனது தந்தை சொன்ன ”குடிசெய்வார்க்கில்லை பருவம்” குறளை குறிப்பிட்ட புவன்பாபுவைப் பாராட்டி, அது தொடர்பாக தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கும், தந்தை பெரியாருக்கும் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வை குறிப்பிட்டு பேசினார்.

சத்துப்போதல்தான் செத்துப் போதல்!

இறுதியாக தந்தை பெரியார் இது போன்ற படத்திறப்பு நிகழ்ச்சியில் பேசிய உரை ஒரு சிறிய நூலாக வந்துள்ள, ”மனித வாழ்வின் பெருமை எது?” என்ற புத்தகத்தை எடுத்துக் காட்டி, அதிலிருந்து மரணம் என்பது என்ன? என்பதை, தந்தை பெரியார் அறிவியல் பூர்வமாக எளிமையாக விளக்கி இருப்பதைப் படித்துக் காட்டினார். முக்கியமாக ”சத்துப்போதல்தான் செத்துப் போதல்” என்று ஆனது என்று குறிப்பிட்டு, இதை வைத்துக் கொண்டு சொர்க்கம் என்றும், நரகம் என்றும் மோட்சம் என்றும் மக்களை ஏய்த்துப் பிழைக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தினார். அதோடு ஆத்மா - ஆன்மா - ஆன்மிகம் என்பதெல்லாம் புரட்டுகள் என்றும் நகைச் சுவை உணர்வுடன் விளக்கி, கோராவின் இணையர் ஹேமாமாலினியும் கோராவின் குடும்பத்தாரும் ஆறுதல் கொள்ள வேண்டும். ”கோரா”வின் குடும்பம் எங்கள் குடும்பம்! மூன்று தலைமுறைகளாக கொள்கைக் குடும் பம்! இந்த உறவு ஆழமானது! தெளிவானது! உறுதியானது! நாங்கள் என்றைக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். நீங்களும் கோராவைப் போல இப்பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கோரி உரையை நிறைவு செய்தார்.

எகிறிந்தி, எகிறிந்தி 

நாத்திக ஜண்டா எகிறிந்தி!

கோராவின் மகள் தமிழரசி சோபன்பாபு நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். தொடர்ந்து தந்தை பெரியார் சிலைக்கருகில் உள்ள கழகக் கொடி மரத்தில் ஆசிரியர் கொடியேற்றினார். கோரா குடும்பத்தாருடனும், சந்திரகாசன் மற்றும் அவருடன் வந்திருந்தோருடனும், தாமதமாக அப்போதுதான் வந்த சாரய்யா குழு வினரைக்கண்டு, உற்சாகத்துடன் தெலுங்கில் இரண்டு சொற்கள் பேசி புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். தாமதமாக வந்திருந்த சாரய்யா குழுவினர் மேடையேறி, ”எகிறிந்தி, எகிறிந்தி நாத்திக ஜண்டா எகிறிந்தி”, ”பேதலா பெண்ணீதி தானுறா மன தந்தை பெரியரு” ஆகிய தெலுங்குப் பாடல்களை தாளத் துடன் பாடி அனைவரையும் உணர்ச்சி கொள்ள வைத்தனர். சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர்  ஆர்.டி.வீரபத்திரன் அவர்களைப் பாராட்டி பரிசளித்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

கோராவின் குடும்பத்தினர், உறவினர்கள், இயக்கத் தோழர்களான கே.சுந்தர் ராஜன், சி. வஜ்ரவேல், கீதா, ராணி, சு.சிவக்குமார், மு.ரகுபதி, க.ராஜேந்திரன், பா.முத் தழகு. முருகேசன், இ.தமிழ்மணி, மு.ரவீந்திரன், பு.நந்த கோபால், அன்பரசு எம்.ஏ,  பூவை, மதுரவாயல் பகுதித் தலைவர் க. தமிழ்ச்செல்வன், பூவை நகரத்தலைவர் பெரியார் மாணாக்கன், பொதுக்குழு உறுப்பினர்கள் பூவை மு.செல்வி, தி.மணிமாறன், கலைமணி, மாணவர் கழக மாநில பொறுப்பாளர் செ.பெ.தொண்டறம், கரைமாநகர் சுரேஷ், மதுரவாயல் அண்ணா நிசார், பெரியார் பிஞ்சு த. இனியன், ஆவடி நகரக் கழகச் செயலாளர் தமிழ்மணி இளைஞர் அணித் தோழர் பூவை வெங்கடேசன், அனகை ஆறுமுகம், பாலச்சந்திரன், சோமங்கலம் இளமாறன் (பாலமுரளி), பெரியார் அமைப்புசாரா தொழிற்சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் ஏழுமலை, அம்பத்தூர் பகுதித் தலைவர் பூ.ராமலிங்கம், அம்பத்தூர் சரவணன், சுரேஷ் குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


No comments:

Post a Comment