'என்றென்றைக்கும் பெரியார் நெறியைப் பரப்பும் பணியில்,
சமூகநீதிச் சமர்க்களத்தில் ஈடுபட்டு
வாழ்நாள் கடமையாற்றுவேன்!'
தமிழர் தலைவர் ஆசிரியர் உறுதி
சென்னை, டிச.11- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த 2.12.2022 அன்று நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. அன்று காலை முதல் பகல் 12 மணி வரை சென்னையில் பெரியார் திடலில் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டு கழகத் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, 'விடுதலை' சந்தாக்கள், நன்கொடை களை வழங்கினர்.
அன்று மாலை சென்னை கலை வாணர் அரங்கில் தலைவர்களின் பாராட்டரங்கம் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் தலைமை யில் நடைபெற்றது. சமூகநீதிக்கான சரித்திர நாயகர் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றி னார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தம்முடைய டிவிட் டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து 3.12.2022 அன்று வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
ÔÔநேற்று எமது 90 ஆம் ஆண்டு பிறந்தநாளுக்காக, காலையில் எமது இல்லத்திற்கு நேரில் வருகை தந்து வாழ்த்தியதுடன், மாலை கலைவாணர் அரங்கில் நடை பெற்ற விழாவிலும் பங்கேற்ற சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் @சிவிளிஜிணீனீவீறீஸீணீபீu அவர் களுக் கும், பெரியார் திடலுக்கும், கலைவாணர் அரங்கிற்கும் வருகை தந்து வாழ்த்திய தலைவர் பெருமக்களுக்கும், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் கள், பல்வேறு அரசியல், சமூக இயக்கங்களின் தலை வர்கள், பொறுப்பாளர்களுக்கும், கல்வியாளர்கள், நீதியரசர்கள், மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள் உள் ளிட்ட பல்துறை ஆளுமைகளுக்கும், எப்போதும் என் னுடன் தோளோடு தோள் நின்று கட மையாற்றும் கருஞ்சட்டை வீரர்களான திராவிடர் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், Ôஎன் றென்றைக்கும் பெரியார் நெறியைப் பரப்பும் பணியில், சமூகநீதிச் சமர்க்களத்தில் ஈடுபட்டு வாழ்நாள் கடமை யாற்றுவேன்' என்ற உறுதி மொழியையே நன்றியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.''
- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment