சென்னை, நவ.19 சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய வரும் 21-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-2023-ஆம் ஆண்டு சம்பா, தாளடி, பிசான பருவ பயிர்களுக்கான காப்பீடு கடந்த செப்.15-ம் தேதி பொது சேவை மய்யங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தொடங்கப்பட்டது. இதுவரை 11 லட்சம் விவசாயிகளால் 15.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதி களிலும் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக் கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய் வதற்கான அவகாசம் கடந்த நவ.15-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயிர்க்காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக நவம்பர் 21-ஆம் தேதி வரை கால அவகாசத்தை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது. பயீர் காப்பீடு செய்ய நாளை, நாளை மறுநாள் வங்கிகள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படவும் அறிவு றுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உட்பட 27 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யது கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, November 19, 2022
சம்பா பயிரை காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு வேளாண்மைத்துறை அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment