கேள்வி
மனிதர்கள் காயப்படுகிறார்கள் என்பதற்காக ஜல்லிக் கட்டுக்கு தடை கேடபீர்களா என பீட்டா அமைப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஓட்டுப்பதிவு
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்ட பிரச்சாரம் நேற்று மாலை ஓய்ந்தது. நாளை 89 தொகுதி களில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
தயார்
சென்னை-பெங்களூர் ரயில் வழித்தடத்தில் ரயில்களை மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்க தேவையான விரிவான திட்ட அறிக்கையை ரயில்வே நிர்வாகத்துக்கு தெற்கு ரயில்வே அனுப்பி வைத்துள்ளது.
நடவடிக்கை
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மின் ஊழியர்கள் பொது மக்களிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை எச்சரித்துள்ளது.
இணைக்க...
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, தமிழ்நாட்டில் இதுவரை 3.62 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்.
வழக்குகள்
தமிழ்நாடு முழுவதும் 1983ஆம் ஆண்டு முதல் 2021 வரை 1,635 ஊழல் வழக்குகள் நிலவையில் உள்ளதாக வும், அந்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
விளையாட்டு...
ஏலகிரி, ஜவ்வாது மலை, கொல்லிமலையில் சுற்றுச் சூழல் முகாமுடன் சாகச விளையாட்டு வசதி ஏற்படுத்தப் படும் என ராணிப்பேட்டையின் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தகவல்.
பாராட்டு...
கடந்த அதிமுக ஆட்சியில் தகுதியற்றோருக்கு வழங்கிய கலைமாமணி விருது திரும்ப பெறப்படும் எனக் கூறியதால் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு.
ரத்து செய்ய...
பாகுபாட்டை ஏற்படுத்தும் விதமாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க. தரப்பில் எழுத்துப்பூர்வ கூடுதல் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment