மத்திய ரிசர்வ் காவல்படையான சி.ஆர்.பி.எஃப்.,பில் முதல் முறையாக இரண்டு பெண்கள் அய்ஜிக்களாக நியமிக்கப்பட்டுள்ள னர்.
1987ஆம் ஆண்டு பதவியில் சேர்ந்த சீமா துண்டியா, ஆனி ஆபிரஹாம் ஆகியோருக்கு அய்ஜியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதில் சீமா துண்டியா பீகார் பிரிவுக்குத் தலைவராகவும் ஆனி ஆபிரஹாம் விரைவு நடவடிக்கைப் படையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மைல்கல்லை எட்ட இரு பெண் அதிகாரிகளும் தங்களது பயணத்தில் அயராத உழைப்பை வழங்கி இருப்பதாக சக அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். முதல் சி.ஆர்.பி.எஃப்., பெண்கள் படை 1986ஆம் ஆண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இன்று ஆறாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் இப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
No comments:
Post a Comment