கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அரசு பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவன் ஜீவா, தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்பதை வலியுறுத்தும் விதமாக ஸ்மார்ட் தலைக்கவசம் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜூஜூவாடி பகுதியில் தனியார் தொழிற்சாலையில் வெல்டராக பணியாற்றிவரும் குமார், விண்ணரசி இணையரின் மகன் ஜீவா. இவர், ஜூஜூவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சாலை களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து காரணமாக உயிரிழக்க நேரிடும் நிகழ்வுகள் இவரது சிறு வயது முதலே மனதை பாதித்துள்ளது.இதன் காரணமாக விபத்துகளில் இருந்து உயிர் பாதுகாப்பிற்காக, கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தப் படும் சீட் பெல்ட் தொழில்நுட்பம் போலவே, இரு சக்கர வாகனங்களிலும் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக அனைவரும் நடைமுறைப்படுத்த புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார்
அதன் பயனாக சென்சார்களை கொண்டு இயங் கும், தலைக்கவசம் மற்றும் அதற்கு தொடர்பான இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் கருவியின் வாயிலாக ஒலி எழுப்புவதுடன் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு எழுத்து ஒளிரும் விதமாக புதிய கருவி ஒன்றை இவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
இந்த கருவிப் பொருத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை இயக்கியவுடன் ஒலி சிக்னலுடன் தலைக்கவசம் அணிக என்கின்ற வாசகமும் முதலில் ஒளிரும். உடனே இருசக்கர வாகன ஓட்டியின், காது மற்றும் உச்சந்தலையில் உள்ள நாடிகளை குறிப்பறிந்து சென்சார் வாயிலாக இயங்கும் விதமாக தயாரிக்கப் பட்ட தலைக்கவசம் அணிந்த உடன் வாகனத்தில் இருந்து எழுப்பப்படும் ஒலி நின்று விடுவதுடன் வாகனமும் ஸ்டார்ட் செய்யப்பட்டு இயக்க தயாராக உள்ள நிலையும் குறிப்பிடப்படும்.
பின்னர் வாகனத்தை எளிதாக தலைக்கவசம் அணிந்தவாறு இயக்கலாம். இதே போல வாகனம் நின்றவுடன் அறியாமல் தலைக்கவசத்தை கழற்றிவிட்டால் பத்து நொடிகள் கழித்து தானாக வாகனம் ஆப் ஆகிவிடும். இது போன்ற ஒரு பாதுகாப்பான தொழில்நுட்பத்தை ஏற்படுத்தி அசத்தியுள்ள மாண வனுக்கு பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
தனது புதிய கண்டுபிடிப்பு குறித்து மாணவன் ஜீவா கூறும்போது:-
சிறு வயது முதலே இருசக்கர வாகன ஓட்டிகளில் விபத்து ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடுவது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எப்படி கார் போன்ற வாகனங்களில் சீட் பெல்ட் உயிர் பாதுகாக்க அணிவது கட்டாயம் என தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறதோ, அதேபோல இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிர்களை பாதுகாக்க இது போன்ற புதிய தொழில்நுட்ப உத்திகள் கையாளப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த புதிய கருவி கண்டுபிடித்து உள்ளது மிகுந்த பெருமையை அளிக் கிறது.
மேலும் இதற்கு எப்பொழுதும் ஊக்கமளித்த பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
இது போன்ற தலைக்கவசம் அணிவதின் கட்டா யம் குறித்து ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுதும் உயிரிழப்பு களை தவிர்க்க தலைக்கவசம் அணிய இயலும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment