சென்னை, நவ.18 முதல் முறையாக ‘கொரிய கண்காட்சி 2022’ சென்னையில், 17.11.2022 அன்று தொடங்கி நவம்பர் 20-ஆம் தேதி வரை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தொடர்ந்து 4-நாட்கள் நடைபெறு கிறது. கொரியாவின் நுகர்பொருள்களை காட்சிப்படுத் துவதே இக்கண்காட்சியின் பிரதான நோக்கமாகும்.
இதில் கொரியாவைச் சேர்ந்த 20 நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளன. கொரியாவின் மிகச் சிறந்த நுகர்வோர் பொருள்கள், உடல் சுகாதாரப் பொருள்கள், மின்னணு சாதனங்கள், உணவு மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட பல பொருள்கள் பொதுமக்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஜிஹ்வான் இயுன் இயக்குநர் ஜெனரல் - கோட்ரா சென்னை கூறுகையில், “சென்னையில் முதல் முறையாக கொரியா கண்காட்சி நடத்தப்படுகிறது. சென்னை மக்களிடையே கொரிய தயாரிப்புகளை பயன்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்துவதற்காக இக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். தென்னிந்தியா வின் கலாச்சார தலைநகராகவும் சென்னை திகழ்வதால் இங்கு கண்காட்சி நடத்த முடிவு செய்தோம் என
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment