துபாய் நூலகத்திற்கு ஆயிரம் நூல்கள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

துபாய் நூலகத்திற்கு ஆயிரம் நூல்கள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அளிப்பு

துபாய், நவ. 14- துபாயில் உள்ள பிர மாண்டமான ஃஷேக் முகமது பின் ரஷீது நூலகத்திற்குத் தமிழ் நாடு அரசு சார்பில் 1000 புத்த கங்கள் நன்கொடையாக வழங் கப்பட்டு உள்ளது. அமீரக அரசு கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு மிகப் பெரிய முதலீடு களைச் செய்து வருகிறது. சுற்று லாப் பயணிகளை ஈர்க்க பிர மாண்டமான கட்டுமானங்கள் கட்டப்பட்டு வருகிறது. உள்ளூர் மக்களுக்கும் பயன் தரும் வகையிலான பல முக்கிய கட்டுமானங் களை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. அப்படித்தான் பிரான்சுடன் இணைந்து லூவர் மியூசியத்தை கட்டியது. அதே போல துபாயில் உள்ள மிக முக்கிய நூலகங்களில் ஒன்று முகமது பின் ரஷித் நூலகம். துபாயில் உள்ள அல் ஜடாப் பகுதியில் அமைந்துள்ள இந்த நூலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது. ஒரே நேரத்தில் சுமார் ஆயிரம் கார்கள் நிறுத்தும் பார்கிங் வச தியும் உள்ளது. அதாவது ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கா னோர் வந்தாலும் கூட நூலகத் தில் படிக்க முடியும்.

இதற்கிடையே துபாயில் உள்ள இந்த ஃஷேக் முகமது பின் ரஷீது நூலகத்திற்குத் தமிழ் நாடு அரசு சார்பில் 1000 புத்த கங்கள் நன்கொடையாக வழங் கப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் சுற்றுலா வுக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் அமீரகம் சென்றுள்ள நிலையில், அவர் இந்த நூலகத் தின் பொறுப்பாளர் முகமது அல் மஸ்ரூஹியை நேரில் சந் தித்து இந்த புத்தகங்களை வழங் கினார். பழந்தமிழ் இலக்கியங் கள், வரலாற்றுப் புத்தகங்கள், சிறுகதைகள், பாரதிதாசன் கவி தைத் தொகுப்புகள் என மொத் தம் ஆயிரம் புத்தகங்கள் ஃஷேக் முகமது பின் ரஷீது நூலகத்திற்கு தமிழ்நாடு அரசு இப்போது நன் கொடையாக வழங்கி உள்ளது. 

அமீரகத்தில் கணிசமான அளவுக்குத் தமிழர்கள் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு இப்போது இந்த தமிழ்ப் புத்த கங்களை வாசிக்கும் வாய்ப்பு உண்டாகி உள்ளது. துபாயில் உள்ள இந்த பிரமாண்ட நூலகம் அப்படியே புத்தகத்தின் வடிவில் அமைக்கப்பட்டு உள் ளது. காண்போரைக் கவரச் செய்யும் வகையில் அமைந்துள்ள இந்த நூலகத்தில் கூட்டங்கள் நடத்தத் தனி அறை, கண்காட்சி இடங்கள், குழந்தைகள் நூலகம், தரை தளத்தில் புத்தகக் கடை, வணிக நூலகம், பயிற்சிக் கூடங் கள் என்று பிரமாண்டமான முறையில் இந்த நூலகம் அமைக் கப்பட்டு உள்ளது. இந்த நூலகம் மிகச் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக ஆறு ஆண்டுகளாக 1 பில்லியன் தினார் (இந்திய மதிப்பில் 26 ஆயிரம் கோடி) செலவில் பார்த்துப் பார்த்து இந்த நூலகத்தை அமீரக அரசு கட்டியுள்ளது. இதில் பல்வேறு துறைகளில் இருந்து பல நூறு புத்தகங்கள் வைக்கப்பட்டு உள் ளது. இப்போது இந்த பட்டிய லில் தமிழ்நாடு அரசு வழங்கிய தமிழ்ப் புத்தகங்களும் இணைந் துள்ளன. இந்த நூலகத்தை கல் விச் சுற்றுலா சென்ற அரசுப் பள்ளி மாணவர்களும் சுற்றிப் பார்த்தனர்.

No comments:

Post a Comment